கோலிவுட் சூப்பர் மேனா?.. கோமாளியா?.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தொடர்ந்து அஜித் குமாரின் படங்களை எடுத்து வந்த எச். வினோத் சதுரங்க வேட்டை படத்தில் "இளைய தளபதி தாக்கப்பட்டார்" என வசனம் வைத்தது போல விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரை வைத்து செய்துள்ளாரா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியான நிலையில், "எங்க அண்ணன்" பாடலை வைத்து ட்ரோல் செய்தனர். இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் மட்டும் தற்போது எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் வெளியான நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் கோலிவுட் சூப்பர் மேன் என கொண்டாடி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

மேலும், விஜய் ஹேட்டர்களும் கோலிவுட் சூப்பர் மேன் போல இல்லை என்றும் கோமாளி போலத்தான் உள்ளார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்த வார இறுதிக்குள் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்கக்ப்பட்டு வந்த நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் போஸ்டர் ஒன்றை கேவிஎன் நிறுவனம் மொபைல் வியூ போல திருப்பி பார்க்கும் அளவுக்கு எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் ஏதோ அவசரத்துக்கு எடிட் செய்து வெளியிட்டது போல வெளியிட்டுள்ளனர். இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என உறுதியாகி உள்ளது.

கோலிவுட்டின் சூப்பர் மேன்: தளபதி விஜய் நீல நிற சட்டையை அணிந்துக் கொண்டு கூலர்ஸ் மாட்டிக் கொண்டு மெர்சல் படத்தில் வரும் வெற்றிமாறன் போல முறுக்கு மீசையுடன் காணப்படும் நிலையில், ஏகப்பட்ட மக்கள் அவரது தோளில் கை வைத்து நிற்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் கோலிவுட்டின் சூப்பர் மேன் என கொண்டாடி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: "Very amateurish poster design. டிசைனருக்கு சம்பள பாக்கியா?" என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு ட்ரோல் செய்துள்ளார். ஃபர்ஸ்ட் சிங்கிள் டைட்டில் மற்றும் எப்போ ரிலீஸ் என எதுவுமே சொல்லாமல், எதற்காக இப்படியொரு போஸ்டரை அவசர அவசரமாக வெளியிட வேண்டும் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











