விஜய்யை முதல் நாள் விமர்சித்த பிரகாஷ் ராஜ்.. ஜனநாயகன் ஷூட்டில் அடுத்த நாள் தளபதி செய்தது தெரியுமா?

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பல தடைகளை கடந்து வரும் அப்படத்தை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் கண்டிப்பாக நாளை தியேட்டர்களில் திருவிழா கோலம்தான் இருக்கும். எப்படியாவது படத்தை மெகா ஹிட்டாக்கிட வேண்டும் என முழு மூச்சில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்த அந்தப் படம் தடைகளை தாண்டி நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். விஜய்யின் படங்கள் பெரும்பாலும் குழந்தைகள் ரசிக்கும்படியாக யு அல்லது யு/ஏ சான்றிதழை பெறும். ஆனால் ஜனநாயகன் வெறும் ஏ மட்டும் வாங்கியிருப்பதால் சிறுவர்கள், சிறுமிகள் தியேட்டருக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

Jana Nayagan - H Vinoth Reveals Vijay Hugged Prakash Raj After His Political Criticism
Photo Credit:

கதறி அழும் பிள்ளைகள்: இப்படி ஒரு சிக்கல் வந்துவிட்டதே என்பதை நினைத்து சிறுவர்களும், சிறுமிகளும் ரொம்பவே சோகமாக இருக்கிறார்கள். சில பிள்ளைகளோ தங்கள் பெற்றோரிடம், இப்போதே விஜய் மாமாவின் ஜனநாயகன் படத்துக்கு எங்களை அழைத்து செல்லுங்கள் என அழுது அடம் பிடிக்கும் வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் அதிகம் வர தொடங்கியிருக்கின்றன. கண்டிப்பாக ரிலீஸ் நாள் அன்று மேற்கொண்டு பல குழந்தைகள் இந்த கோரிக்கையை முன்வைத்து கதறி அழுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
Anbe Diana Day 5 Box Office - அன்பே டயானா 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் காப்பாற்றியதா இல்லையா?
Anbe Diana Day 5 Box Office - அன்பே டயானா 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் காப்பாற்றியதா இல்லையா?

ப்ரோமோஷனில் வினோத்: படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார் ஹெச்.வினோத். சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்த அவர், நேற்று தனியாக செய்தியாளர்களையும் சந்தித்தார். தான் கொடுக்கும் அத்தனை பேட்டிகளிலும் விஜய்யை புகழ்ந்தே பேசிவருகிறார். மேலும், ஜனநாயகன் பட பிரச்னையின்போது இரண்டு முறை தான் அழுததாகவும்; அப்போது விஜய்யும், தயாரிப்பாளரும்தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். மனது கஷ்டமாக இருந்தால் எனக்கு ஃபோன் செய்யுங்கள் என விஜய் கூறியதாக தெரிவித்திருந்தார்.

பிரகாஷ் ராஜ் பற்றி: இந்நிலையில் அவர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில் ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "ஜனநாயகன் படத்தில் பிரகாஷ் ராஜும் நடிக்கிறார். அவர் முதல் நாள் இரவு விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். அடுத்த நாள் அவருக்கு ஜனநாயகன் ஷூட்டிங். இப்படி விமர்சித்திருக்கிறாரே இவரும், விஜய்யும் எப்படி பேசிக்கொள்ள போகிறார்கள் என்று நான் ஸ்பாட்டில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

விஜய் செய்தது: விஜய் அடுத்த நாள் காலை வந்தார். வந்தவர் பிரகாஷ் ராஜை பார்த்தது, க்யூட்டாக ஓடி வந்து அவரை கட்டியணைத்து, 'செல்லம்' என கூறினார். இரண்டு பேரும் சாதாரணமாக பேசிக்கொண்டார்கள். விஜய்யை பொறுத்தவரை அரசியல் வேறு, சினிமா வேறு. படத்தில் தவெக தொடர்பான ரெஃபரன்ஸ்களை எல்லாம் தேடி தேடி நீக்கினார்" என்றார். முன்னதாக, ஜனநாயகன் பட சமயத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், 'ஒரு சினிமாவுக்குள் நீ டாக்டர் ஆகலாம். பொறியாளர் ஆகலாம்.

அரசியலில் அப்படியே முதலமைச்சர் ஆகிவிடுவாயா என்று கேட்டிருந்தார். அந்த சமயத்தில் பிரகாஷ் ராஜின் அந்தப் பேச்சு பெரிய வைரலானது. ஏனெனில் பிரகாஷும், விஜய்யும் கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு, வாரிசு என பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X