ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. குற்றவாளிகளுக்கு எல்லா கதவுகளையும் அடைத்த நீதித்துறை

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது படக்குழுவினருக்கு, திரைத்துறையினருக்கு ரசிகர்களுக்கு என அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இப்படி இருக்கையில் இந்த படத்தை திருடி, இணையத்தில் லீக் செய்ததாக மொத்தம் 9 பேரை சைபர் கிரைம் காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் உமா சங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டதால், உமாசங்கர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் உமா சங்கர் துணிக்கடையில் வேலை செய்து வரும் மேலாளரே தவிர அவர் திரைப்பட எடிட்டர் இல்லை என்ற தகவல் வெளியாகி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

Jana Nayagan Leak Case Court Denies Bail Tightens Action in Vijay Film Piracy Issue

பிரசாந்த் என்பவர்தான் படத்தை திருட்டுத்தனமாக நகலெடுத்து, துணிக்கடையில் வேலை பார்க்கும் உமா சங்கருக்கு பகிர்ந்துள்ளார். உமா சங்கர், படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் என்று ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

உழைப்பு பாதிப்பு: எடிட்டிங் ஸ்டூடியோவில் இருந்து தான் விஜய்யின் ஜன நாயகன் படத்தை பிரசாந்த் என்பவர் தனது லேப்டாப்பில் திருட்டுத் தனமாக தனது லேப்டாப்பிற்கு பகிர்ந்து கொண்டது மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 500 பேர் வீதம் வேலை செய்து 145 நாட்கள் கடுமையாக உழைத்த அனைத்து உழைப்பும் பாதிக்கப்பட்டதுடன் திருடப்பட்டுள்ளது. கைதானவர்களை மேலும் விசாரிக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல் துறையின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Jana Nayagan Leak Case Court Denies Bail Tightens Action in Vijay Film Piracy Issue

முன் ஜாமீன் மறுப்பு: இப்படி இருக்கையில் குற்றவாளிகள் 9 பேருக்கும் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒருவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், மற்றவர்களும் முன்ஜாமீன் கேட்க அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அவர்களும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால், அந்த வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை படக்குழுவினர், திரையலகத்தினர், விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள், நெட்டிசன்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X