ஜனநாயகன் எடிட்டர் குற்றவாளியா?.. அவர் மனைவி ஒரே அழுகை.. 8 மாத கர்ப்பம் வேறு.. ச்ச பாவம்
சென்னை: விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதம் ரிலீஸாக வேண்டிய படம் சென்சார் அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையால் ரிலீஸாகவில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு முழு படமும் ரிலீஸானது. அதில் EDI_REF என்று குறிப்பிடப்படிருந்ததால்; அந்தப் படத்தின் எடிட்டர் தரப்பிலிருந்துதான் லீக்காகியிருக்கும் என பலர் சொன்னார்கள். அது இந்த விஷயத்தில் மேற்கொண்டு அதிர்ச்சியை கிளப்பியது.
விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் லீக்கானது. முதலில் சில நிமிட காட்சிகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து முழு படமும் வந்துவிட்டது. தியேட்டரிலேயே ரிலீஸாகத ஒரு படம் இணையத்தில் லீக்கானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த திரையுலகத்தினரும் சேர்ந்து இந்த விஷயத்தில் கண்டனத்தை பதிவு செய்தார்கள். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் பறந்தன.

ஆறு பேர் கைது: தொடர்ந்து காவல் துறையினர் இந்த விஷயத்தில் குற்றவாளிகளை தேடிவந்தார்கள். இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது. நிலைமை இபப்டி இருக்க மொத்தம் ஆறு பேரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே இணையத்தில் கசிந்த ப்ரிண்ட்டில் EDI_REF என்ற வாட்டர் மார்க் இருந்தது. இந்த காப்பி எடிட்டர், ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய நான்கு பேரிடம் மட்டும்தான் இருக்கும். எனவே அந்த நான்கு பேரிலிருந்துதான் படம் லீக்காகியிருக்க வேண்டும் புது தியரியை உருவாக்கினார்கள்.
அமீரும் அப்படி: மேலும் இயக்குநரும் நடிகருமான அமீரும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "அதேபோல் கசிந்த காட்சிகளில் Edit Ref என்று இருக்கிறது. சென்சார் காப்பி என்றால் அதில் சென்சார் வாட்டர் மார்க் இருக்கும். இதில் எடிட் என்று இருக்கிறது. எனவே எடிட்டர்தான் குற்றவாளி" என கூறியிந்தார். திரைத்துறையில் இருக்கும் மூத்த இயக்குநரே எடிட்டர் மீது இப்படி ஒரு குற்றத்தை சுமத்தியது மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இனிமேலும் அமைதியாக இருந்தால் எடிட்டரை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடுவார்கள் என முடிவு செய்து ஃபெப்சி சங்கத்தினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
எடிட்டர் சங்க தலைவர்: அப்போது பேசிய எடிட்டர்கள் சங்க தலைவர் கோபி, "இந்த விஷயத்துக்கும் பிரதீப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சென்சார் தாமதமானதால் படத்தில் சில சிஜி காட்சிகளை சேர்க்க வினோத் முடிவு செய்தார். எனவே ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸுக்கு படம் அனுப்பப்பட்டது. அந்த போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது இந்த லீக் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. எங்கள் தொழில் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது" என கூறியிருந்தார்.
ஆர்.கே.செல்வமணி பேட்டி: மேலும், ஃபெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவல் துறையினர் நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை. மிக சரியாக அவர்கள் குற்றவாளிகளை நெருங்கிவிட்டார்கள். எங்களால் பிரதீப்புடன் பேச முடியவில்லை. யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று காவல் துறை கூறியிருப்பதாக அவரது தந்தை கூறினார். காவல் துறையினர் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். பிரதீப்பின் மனைவி எட்டு மாத கார்ப்பம்.
அவர் நேற்றிலிருந்து அழுதுகொண்டே இருக்கிறார். பாவம். அமீர் தன்னுடைய கருத்தை திரும்ப பெற வேண்டும் என பட தொகுப்பாளர்கள் சங்கத்தினர் கடிதமாக கொடுத்திருக்கிறார்கள். அமீர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். யாராவது விசிட்டிங் கார்டை போட்டுவிட்டு திருடுவார்களா?. இன்று இருக்கும் டெக்னாலஜியில் என் ரெஃபரன்ஸையும் போடலாம். ஏன் ட்ரம்ப் ரெஃபரன்ஸையே போடலாம். பத்திரிகையாளர்களும் எங்கள் டெக்னீஷியன்களை காயப்படுத்த வேண்டாம்" என்றார்.


Click it and Unblock the Notifications















