ஜனநாயகன் லீக்.. எடிட்டர் பிரதீப் ராகவ் மீது ஆக்‌ஷன்.. அச்சச்சோ இப்படி ஆகிப்போச்சே!

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படம் முழுவதுமாக இணையத்தில் கசிய காரணமே ஃப்ரீலேன்சர் எடிட்டர் மற்றும் சிலர் தான் என விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில், படத்தொகுப்பாளர்கள் சங்கம் ஆரம்பத்தில் எடிட்டர் பிரதீப் ராகவிற்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் அவருக்கும் பொறுப்பு உண்டு எனக்கூறி அதிரடியாக இடைக்கால நீக்கம் செய்துள்ளனர்.

விஜய் படங்கள் என்றாலே ரிலீஸ் பிரச்னை முதல் தியேட்டரில் படம் வந்த அடுத்த நொடியே மொத்த படமும் லீக் ஆவது, படம் வெளியாவதற்கு முன்பே மாஸ்டர் படத்தை போல பல காட்சிகள் லீக் ஆவது என ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

Jana Nayagan Leaked Editor Pradeep E Ragav got suspended by South India Editor Association

கடைசி படத்துக்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் நீதிமன்றம் வரை சென்று படத்தின் ரிலீஸ் தேதியே நிறுத்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் எல்லாம் அதிகமாக இருந்த நிலையில், மொத்தத்துக்கும் வேட்டு வைக்கும் விதமாக ஹெச்டி தரத்தில் முழுப் படமே இணையத்தில் லீக்கானது படக்குழுவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

500 கோடி அம்போ: விஜய்க்கு 200 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைக் கொடுத்து 500 கோடி பிசினஸில் உருவான ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த நிலைஇல், கேவிஎன் படக்குழுவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படம் ஜூன் மாதம் எந்தவொரு சிக்கலும் இன்றி வெளியானால் மட்டுமே கொஞ்சம் சமாளிக்க முடியும் என்கின்றனர். ஜன நாயகன் எப்போது வெளியானாலும் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பெரிதாக இருக்காது என்றும் பெரிய இழப்பு தான் என்றும் கூறுகின்றனர்.

பிரதீப் ராகவ் மீது ஆக்‌ஷன்: ஜன நாயகன் படம் கசிந்ததில் நேரடியாக எடிட்டர் பிரதீப் ராகவிற்கு தொடர்பு இல்லை என்றாலும், எடிட்டிங் ரூமில் இருந்து படம் திருடப்போன நிலையில், அவரது கவனக்குறைவு தான் காரணம் என்றும் அதற்கு முழுப் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும் என தற்போது படத்தொகுப்பாளர்கள் சங்கம் தற்காலிகமாக அவரை சஸ்பெண்ட் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யார் இந்த பிரதீப் ராகவ்?: விஷால் நடித்த கதகளி படத்தை இயக்கி படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ராகவ். டிக் டிக் டிக், கோமாளி, லவ் டுடே, ஸ்டார், டிராகன், லீடர், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். விஜய்யின் ஜன நாயகன் பட வாய்ப்பு தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு அந்த படமே பேரிடியை இறக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X