Jana Nayagan: ஜன நாயகன் படத்துக்கு ’ஏ’ சான்றிதழ்.. ரிலீஸ் இந்த தேதியில் தானா?.. சிஎம் விஜய் டைட்டில்!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் விரைவில் வரப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஜூலை 9ம் தேதியான இன்று தணிக்கைச் சான்றிதழ் வெப்சைட்டிலேயே ஜன நாயகன் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள லிங்க்கை தயாரிப்பு நிறுவனத்துக்கு முன்னதாக ரசிகர்கள் தேடிப் பிடித்து சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்த செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரிலீஸ் தேதியையும் அதன் உடன் அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் வெளியாகும் படங்கள் எந்தவொரு தடையுமின்றி நாளை வெளியாகும் என தெரிகிறது. அடுத்த வாரம் வெளியாகும் படங்களுக்கும் அதற்கு அடுத்த வாரம் வெளியாகும் படங்களும் கொஞ்சம் யோசித்து வெளியிடுவது நல்லது. ஏன்னா இது தளபதி படம் மட்டுமல்ல இப்போ சிஎம் படம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தோரணங்களை கட்டத் தொடங்கிவிட்டனர்.
ஜன நாயகன் படத்துக்கு ஏ சர்டிபிகேட்: ஜனவரி 9ம் தேதி தொடங்கிய போராட்டம் ஜூலை 9ம் தேதி ஜன நாயகன் படத்துக்கு ஒருவழியாக பல மாதங்கள் கடுமையான போராட்டத்தின் பலனாக இன்று ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலகிருஷ்ணா நடித்து தேசிய விருது பெற்ற பகவந்த் கேசரி படத்தில் இருந்து பெரும்பாலான கதையை எடுத்து இந்த படத்தை ரீமேட் செய்துள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே இணையத்தில் மொத்த படமும் ஹெச்டி தரத்தில் எடிட் ரூமில் இருந்து கசிந்த நிலையில், 1.2 கோடி பேர் பார்த்து விட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இன்னமும் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க காத்து இருக்கின்றனர். ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் தியேட்டருக்குச் சென்று பார்க்க முடியாத சூழலும் உருவாகியுள்ளது. கடைசியாக ரஜினிகாந்தின் கூலி படத்துக்கும் ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கும் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஜூலை 24 ரிலீஸ்: ஜன நாயகன் திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்த நிலையில், அடுத்த வாரமே ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ள நிலையில், வரும் ஜூலை 24ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா, லோகேஷ் கனகராஜின் டிசி உள்ளிட்ட படங்கள் ஜூலை 31ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஜன நாயகன் 2 வாரங்கள் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா? அல்லது விஜய் படத்தை ஒரே வாரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்கள் பார்த்து விடுவார்கள் என்பதால் தைரியமாக ரிலீஸ் செய்வார்களா என்பது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்ததும் தெரிந்து விடும். ஜூன் நாயகன் மிஸ் ஆன நிலையில், ஜூலை நாயகனாக ஜன நாயகன் தியேட்டர்களை தீபாவளியாக்கப் போவது உறுதி.


Click it and Unblock the Notifications