விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் ஜனநாயகன்?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு.. விவரம் இதுதான்

சென்னை: விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்தது. பல பிரச்னைகளை சந்தித்து ரிலீஸாகாமல் முடங்கியிருக்கிறது படம். விஜய் இப்போது முதலமைச்சராகிவிட்டதால் எப்போது ஜனநாயகன் ரிலீஸாகும் என்ற ஆவல் அனைத்து ரசிகர்களிடமும் எழுந்திருக்கிறது.

அரசியல் பிரவேசம் செய்து முதலமைச்சராகிவிட்டார் விஜய். எனவே இனிமேல் அவரை திரையில் பார்ப்பது நடக்காத ஒன்று என கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரது கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகனை பார்க்க அவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். முதலில் ஜனவரி மாதத்திலேயே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப்போனது. நீதிமன்றத்துக்கெல்லாம் பட தயாரிப்பு நிறுவனம் சென்றது.

Jana Nayagan Release Date Update Vijay s Final Film May Hit Screens on June 22
Photo Credit:

மறு தணிக்கையிலும் தாமதம்: ஆனால் அதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்ற கேவிஎன் நிறுவனம்; மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பி வைத்தது. அப்போதும் அதிகாரிகள் படத்தை பார்க்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு முழு படமும் இணையத்தில் லீக்காகிவிட்டது. இப்படி ஒரு படு பாதக செயலை யார் செய்திருப்பார் என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சிலர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Also Read
ரம்பா வீட்டில் சோகம்.. வெறுமையில் தவிக்கிறாராம்.. அப்பாவை நினைத்து ஃபீலிங்.. அவங்களே சொல்லியிருப்பதை பாருங்க
ரம்பா வீட்டில் சோகம்.. வெறுமையில் தவிக்கிறாராம்.. அப்பாவை நினைத்து ஃபீலிங்.. அவங்களே சொல்லியிருப்பதை பாருங்க

எப்படி நடந்தது?: முதலில் இந்தப் படத்தை எடிட்டர்தான் லீக் செய்திருப்பார் என தகவல்கள் பரவின. ஆனால் அதில் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது. அதேசமயம் படத்தின் எடிட்டர் தனக்கு உதவியாளராக ஒருவரை சேர்த்திருக்கிறார். அவர் மூலம்தான் படம் இணையத்தில் லீக்கானது என்பது பின்னர் தெரியவந்தது. படம் லீக்கானதற்கு பட தொகுப்பாளர் நேரடி காரணமாக இல்லாவிட்டாலும்; சங்கத்தில் இல்லாத ஒருவரை உதவியாளரை வைத்து அலட்சியத்தோடு நடந்துகொண்டதால் அவர் தென்னிந்திய எடிட்டர்கள் சங்கத்திலிருந்து நீக்கமும் செய்யப்பட்டார்.

எப்போது ரிலீஸ்?: இப்படி ஜனநாயகன் திரைப்படம் பலகட்ட பிரச்னைகளை பார்த்துவிட்டது. ஆனாலும் சென்சார் அதிகாரிகள் மறு தணிக்கையிலும் படத்தை பார்க்காமல் இழுத்தடிப்பதாக தெரிகிறது. இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டார் என்பதால் படத்தின் ரிலீஸுக்கு எதுவும் பிரச்னை வராது என்று கருதப்படுகிறது. கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர்கூட சமீபத்தில் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய தகவல்: இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் கிளம்பியிருக்கிறது. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும் புக் மை ஷோ தளத்தில், ஜூன் 22ஆம் தேதி முதல் ஜனநாயகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் விஜய்யின் பிறந்தநாள் ஆகும். எனவே ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக அந்த நாளில் ஜனநாயகனை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பிளான் செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X