ஜனநாயகன் படத்துக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்.. தொடர்ந்து அடி விழுதே.. என்ன செய்யப்போறாங்களோ?

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததன் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. அதனையடுத்து இவ்விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்று பல்வேறு காட்சிகளை பார்த்துவருகிறது. இந்நிலையில் கேவிஎன் நிறுவனத்துக்கு செக் வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றி பிறப்பித்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என விஜய் அறிவித்தார். அதன்படி அப்படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸுக்கு பிளான் செய்திருந்தார்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுப்பதற்கு மறுத்துவிட்டார்கள். இப்போது வந்துவிடும் அப்போது வந்துவிடும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

நீதிமன்றத்தில் வழக்கு: இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பட தயாரிப்பு நிறுவனம். அதனை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, 'ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். எனவே படத்துக்கு எழுந்த சிக்கல் எல்லாம் தீர்ந்துவிட்டது என ரசிகர்கள் மகிழ்ச்சிடைந்தார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக மேல்முறையீடுக்கு சென்றது சென்சார் தரப்பு.

Jana Nayagan Release Delayed Again Supreme Court Puts Check on Vijay Starrer
Photo Credit:

சுப்ரீம் கோர்ட்டில்: அதனை விசாரித்த நீதிமன்றமோ தனி நீதிபதி கொடுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கேவிஎன் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் கண்டிப்பாக சாதகமான நிலைமை உருவாகும் என்றுதான் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். இந்நிலையில் இன்று கேவிஎன் நிறுவனத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது.

செக் வைத்த நீதிமன்றம்: வழக்கை விசாரித்த நீதிபதியோ இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பான விசாரணையை 20ஆம் தேதி நடத்தவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இன்று எப்படியாவது தீர்ப்பு வந்துவிடும்; பொங்கல் பண்டிகை முடிவதற்குள்ளாகவே படம் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக நினைத்தார்கள் ரசிகர்கள். ஆனால் நீதிமன்றம் செக் வைக்கும் விதமாக விசாரணையையே 20ஆம் தேதிதான் நடத்த வேண்டும் என தெரிவித்துவிட்டது.

எப்போது ரிலீஸ்?: எனவே பொங்கல் விடுமுறையில் ஜனநாயகன் வராதது முழுவதுமாக உறுதியாகிவிட்டது. தளபதியின் கடைசி படத்தை இப்படி இழுத்தடிக்கிறார்களே என உச்சக்கட்ட வேதனையடைந்திருக்கிறார்கள் ரசிகர்கள். 20ஆம் தேதி விசாரணையிலாவது ஒரு நல்ல முடிவு கிடைக்கும் எனவும்; கண்டிப்பாக இந்த மாதத்துக்குள் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள் எனவும் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். பார்ப்போம் நல்லது ஏதாவது நடக்குமா என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X