பிஎம் சார் வீட்லதான் இருப்பேன்.. வெந்த புண்ணுல வேல் பாயுதே.. ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு.. பறக்கும் மீம்ஸ்

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸிலிருந்து தள்ளிப்போயிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் உருக்கமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாயும் விதமாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் பறந்துவருகின்றன.

அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஜனநாயகனோடு திரைத்துறைக்கு குட் பை சொல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடைசி படம் என்று கருதப்படும் ஜனநாயகன் தளபதி ரசிகர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து கடைசியாக ஒருமுறை திரையில் விஜய்யை கொண்டாடிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் சென்சார் மூலம் சிக்கல் வந்தது.

Jana Nayagan Release Postponed Vijay Fans Trolled with Viral Memes Online here are more details
Photo Credit:

என்ன பிரச்னை: அதாவது டிசம்பர் மாதமே சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்தாலும் இன்னமும் சான்றிதழ் தராமல் இருக்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த கேவிஎன் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. அங்கும் இன்று, நாளை என விசாரணை தள்ளிப்போகிறது. இதன் காரணமாக பட ரிலீஸை ஒன்பதாம் தேதியிலிருந்து தள்ளி வைத்திருக்கிறது படக்குழு. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நள்ளிரவு எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டது.

எதிர்பார்க்காத பிரச்னை: ஜனநாயகன் பட ரிலீஸ் சமயத்தில் பிரச்னை வரும் என்று விஜய் ரசிகர்க்ள் எதிர்பார்த்தார்கள்தான்; ஆனால் ரிலீஸே தள்ளிப்போகும் அளவுக்கு பிரச்னை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதற்கு முழு காரணமும் பாஜகதான் என சில விஜய் ரசிகர்கள் கூறினாலும்; இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது பாஜகவினரின் கருத்தாக இருக்கிறது. புதிய ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பறக்கும் மீம்ஸ்: இப்படி உச்சக்கட்ட வேதனையில் அவர்கள் இருக்கும்போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மீம்ஸ் ஒவ்வொன்றாக இறங்கிவருகிறது. இந்த நெட்டிசன், ஜனநாயகன் போட்டிக்கு இருந்ததால்தான் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பராசக்திக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்ததாகவும்; இப்போது விஜய் படம் ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதால் அவர்கள் தங்கள் சைலெண்ட் மோடுக்கு போய்விட்டார்கள் என்பதை குறிக்கும்வகையில் வடிவேலுவின் இந்த சூப்பர் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி கலாய்த்திருக்கிறார்.

Jana Nayagan Release Postponed Vijay Fans Trolled with Viral Memes Online here are more details
Photo Credit:

லீவு கேன்சல் சார்: ஜனநாயகன் ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருந்ததால் பலரும் அன்றைய தினம் அலுவலகத்தில் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி விடுமுறை எடுத்திருப்பார்கள். இப்போது அந்த தேதியில் தளபதி கச்சேரி இல்லாததால், லீவை கேன்சல் செய்வார்கள் என மீம் பகிர்ந்திருக்கிறார். மேலும் இன்னொருவர், டியூட் படத்தின் கேரக்டரில் சிவகார்த்திகேயனின் முகத்தை வைத்து, விஜய் படம் வரவில்லையென்றாலும் திமுக ஆதரவு கொடுப்பார்களா என கேட்டு; இவ்விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் அரசியலை சொல்லியிருக்கிறார்.

இவரும் ஜனநாயகன் தள்ளிப்போயிருப்பதால் ரஜினி, அஜித் ரசிகர்க்ள பராசக்தியை கண்டுகொள்ளமாட்டார்கள் என சச்சின் பட காமெடியை பயன்படுத்தி பகிர்ந்திருக்கிறார்.

பிஎம் சார் வீட்லதான் இருப்பேன்: அனைத்துக்கும் மேலாக கரூர் துயர சம்பவத்தின்போது சிஎம் சார் நான் வீட்டில்தான் இருப்பேன் என விஜய் கூறியதை; இப்போது, 'பிஎம் சார் நான் வீட்டில்தான் இருப்பேன்' என சொல்வது போல் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்து இந்த மீம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Jana Nayagan Release Postponed Vijay Fans Trolled with Viral Memes Online here are more details
Photo Credit:

அதுமட்டுமின்றி, விஜய்யின் ரசிகர்கள் பெரும்பாலும் பள்ளி சிறுவர்கள், சிறுமிகள் என சொல்லப்படும். இந்த மீமில் பள்ளி குழந்தை ஒன்று ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போவதை நினைத்து சென்சார் போர்டை நொந்துகொள்ளும் மாதிரி மீமை பகிர்ந்திருக்கிறார் நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X