Jana Nayagan: வெற்றிநடை போடும் வசூல் மழை.. ஜன நாயகன் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் இணையத்தில் கசிந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை. ஜனநாயகன் படத்தை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வரும் நிலையில் படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரங்கள் வெளியாகி, திரையுலகினரையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜனநாயகன்: எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் என பல டாப் நடிகர்கள் நடித்துள்ளனர். அப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்று இருக்கும் தளபதி கச்சேரி பாடலுக்கு தியேட்டரில் அனைவரும் எழுந்து ஆட்டம் போட்டனர். விஜயின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் என்பதால் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கண்கலங்கினார்கள்.

jana nayagan box office
Photo Credit:

2 நாள் வசூல்: இத்திரைரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் ₹41 கோடியைஅள்ளி மாஸ் காட்டியது. உலகளவில் முதல் நாள் முடிவில் சுமார் ₹78.27 கோடி முதல் ₹83.72 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. இரண்டாவது நாளான நேற்று வேலை நாட்களாக இருந்த போதும் படம் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. 2-வது நாள் வசூல், ₹21.15 கோடியும் இந்தியாவில் வசூல் ₹63.85 கோடியாக உள்ளது.

அதிரடி வசூல் சாதனை: ஜனநாயகன் படத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், வெளிநாடுகளில் ₹37.50 கோடி வரை வசூலித்து, உலகளாவிய மொத்த வசூல் ₹112.50 கோடியாக அதிகரித்துள்ளது. படத்திற்கு தொடர்ந்து மக்களிடம் நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பதிவுகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால்,வரும் நாட்களில் இந்த வசூல் பல நூறு கோடிகளைத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X