Jana Nayagan 2nd single: ஒரு பேரே வரலாறு.. ஜன நாயகன் செகண்ட் சிங்கிள் புரொமோவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அதன் அட்டகாசமான புரொமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தற்போது வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிரபாஸின் ராஜாசாப் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட பெரிய படங்களுடன் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகிறது. ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் விஜய்யின் ஜன நாயகன் வெளியாகவுள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜன நாயகன் செகண்ட் சிங்கிள் பாடல் பாடலின் புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்க்காக இறங்கி அடிக்கும் வினோத்: சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எச். வினோத் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி ஒட்டுமொத்த உச்ச நடிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். அஜித் குமாருக்கு வினோத்தின் டைரக்ஷன் ரொம்பவே பிடித்துப் போக பிங்க் ரீமேக்கை நேர்கொண்ட பார்வை என வினோத்தை இயக்க வைத்தார். அந்த படத்தைத் தொடர்ந்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் தற்போது விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் இல்லாத அளவுக்கு கமர்ஷியல் அம்சங்களுடன் விஜய்க்காக வினோத் இறங்கி அடித்துள்ளார் என தெரிகிறது.
ஒரு பேரே வரலாறு: விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. நாளை ஜன நாயகன் செகண்ட் சிங்கிளான "ஒரு பேரே வரலாறு பாடல் 6.30 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் அட்டகாசமான புரொமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. "ஒரு பேரே வரலாறு.. அழிச்சாலும் அழியாது.. அவன் தானே ஜன நாயகன்.. நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் நடக்காது" என அரசியல் வரிகளுடன் கூடிய பாடலாக ஜன நாயகன் செகண்ட் சிங்கிள் உருவாகியுள்ளது.
பராசக்தி vs ஜன நாயகன்: டிசம்பர் 18ம் தேதி ஜன நாயகன் செகண்ட் சிங்கிள் மற்றும் அதே நேரத்தில் பராசக்தி படத்தின் 10 நிமிட வீடியோ காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலை சோஷியல் மீடியா தீப்பற்றி எரியும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











