நம்பிக்கையா சேரு.. காலம் பொறக்குதுடா.. ஜனநாயகன் பாடலில் அரசியல் வரிகள்.. அறிவு பார்த்த வேலை!

சென்னை: தளபதி விஜய் சினிமாவில் இருந்து விடை பெறுகிறேன் என்றும் ஜன நாயகன் படம் ஏற்கனவே கமிட்டான நிலையில், தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

வரும் பொங்கலுக்கு ஜன நாயகன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி டிரெண்டாகி வருகிறது. சோஷியல் மீடியா மொத்தமும் தளபதி ரசிகர்கள் கன்ட்ரோலுக்கு வந்துவிட்டது.

Jana Nayagan song contains Political lyrics done by Arivu
Photo Credit:

அஜித் ரசிகர்கள் உட்பட அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடும் வகையில் ஜன நாயகன் பாடல் உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர் தனது பாடல்களில் அரசியல் கருத்துக்களையும் தத்துவங்களையும் அடுக்கி வைத்த நிலையில், ஜன நாயகன் தளபதி கச்சேரி பாடலிலும் ஆரம்பத்திலேயே சில அரசியல் என்ட்ரிக்கான வரிகளை பாடலாசிரியர் அறிவு அழகாக வைத்திருக்கிறார்.

நம்பிக்கையா சேரு: "நண்பா நண்பி செல்லம் பாரு.. நம்பிக்கையா சேரு.. இருக்குதுடா.. காலம் பொறக்குதுடா" என ஆரம்பத்திலேயே அனிருத்தின் குரலில் தளபதி கச்சேரி பாடலில் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான வரிகளும் தளபதி ஆட்சி வந்தால் நல்ல காலம் பொறக்கும் என்கிற உணர்வும் திணிக்கப்பட்டுள்ளது. மேலும், "தனக்குன்னு வாழாத.. நீ தரத்துல தாழாத.. ஒருத்தனும் வாரானே.. திருத்திட போறானே" என ஓபனிங்கே விஜய்யின் அரசியல் வருகைக்கான வரிகளுடன் பிளாஸ்ட் தெறிக்கிறது.

ஒரு மாபெரும் நாடு: நடிகர் விஜய் தளபதி கச்சேரி பாடலில் பாடும் போது, "ஒரு மாபெரும் நாடு.. அதன் வேர்களில் நம்ம வேர்வை பாரு" என விவசாய மக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் கவரும் விதமான வரிகளை பாடியுள்ளார். அறிவு இந்த வரிகளை ஆழமாகவும் அழுத்தமாகவும் எழுதி அசத்தியுள்ளார்.

இந்தி வரிகள்: "ஆவோ டுகெதர் பய்யா பய்யா.. ஜாதி பேதமெல்லாம் லேதய்யா" என்கிற இந்தி வரிகளும் அதனை தொடர்ந்து "நீங்கள் சிநேகம் போல்" என்கிற மலையாள வரிகளும் ஜன நாயகன் பாடலில் இடம்பெற்றூள்ளன. ஜாலியான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமான பாடலில் அரசியல் கருத்துக்களையும் விஜய் புகுத்தச் சொல்ல அறிவு அடுக்கியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. படத்தில் எச். வினோத் என்னமாதிரியான அரசியல் காட்சிகளையும் கருத்துக்களையும் வைத்துள்ளார் என்பதை ஜனவரி 9ம் தேதி பார்த்துவிடுவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X