ஜன நாயகன் படத்தின் அடுத்த அப்டேட்.. தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்?

சென்னை: கரூர் துயரம் நடந்து சில வாரங்கள் அமைதியாக இருந்த விஜய் தரப்பு மீண்டும் மெல்ல மெல்ல அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். கரூரில் விஜய் ரோடு ஷொவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் தத்தெடுக்கப் போவதாகவும், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தவெக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

இன்னொரு பக்கம் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பொங்கலுக்கு ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்வதில் முழு மூச்சுடன் செயல்படத் தொடங்கியுள்ளனர். பூஜா ஹெக்டேவேன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jana Nayagan Tamil Nadu theaterical rights bought by a huge price by this Production house

விஜய்க்கு ஆரம்பத்தில் அந்த நிறுவனத்திடம் படத்தை கொடுக்க சம்மதம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த நிறுவனமே வாங்கியுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரியில் ஜன நாயகன்: விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மமிதா பைஜு முக்கிய ரோலில் நடித்துள்ளார். தீபாவளி, பொங்கல் என மமிதா பைஜு படங்கள் வரிசை கட்டி வெளியாகின்றன. மேலும், வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஆயுத பூஜை, விஜய தசமி என தசராவுக்கே ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரூர் துயரம் காரணமாக ஜன நாயகன் பட அப்டேட்கள் அடக்கி வாசிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளிக்கு ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

ரோமியோ பிக்சர்ஸ்: மேலும், ஜன நாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாகவும் ஏஜிஎஸ், ஃபைவ் ஸ்டார் செந்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ என பலத்த போட்டி நிலவிய நிலையில், ராகுல் படத்தை வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X