Jana Nayagan - விஜய்யின் ஜனநாயகன்.. டைட்டில் கார்டிலேயே சட்டப்பேரவையில் செய்த ஆக்ஷன்.. செம சம்பவம்
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று ரிலீஸாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லாவிட்டாலும்; பக்கத்து மாநிலங்களில் அனுமதி கிடைத்திருப்பதால் அங்கே சென்று படம் பார்த்துவருகிறார்கள். இந்நிலையில் படத்தின் டைட்டில் கார்டே ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்திருக்கிறது.
One Last Time, One Last Dance.. இந்த வாசகங்கள்தான் சில நாட்களாக விஜய் ரசிகர்களின் வாயில் அடிக்கடி வருவது. அரசியல் பிரவேசம் செய்துவிட்டதால் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்ட விஜய்;ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று சொல்லிவிட்டார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்; கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு ஏ சான்றிதழ்: படமானது ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தது. முதலில் ஜனவரி மாதம் ரிலீஸுக்கு பிளான் செய்திருந்தார்கள். அதற்கு பிறகு நடந்த விஷயங்கள் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்ததுதான். விஜய்யின் கரியரிலேயே ஜனநாயகன் படம்தான் பல பிரச்னைகளை சந்தித்தது. இருப்பினும் படக்குழு நம்பிக்கையை இழக்காமல் தனக்கு தெரிந்த அத்தனை வழிகளிலும் போராடியது. அதன் பலனாக சில வாரங்களுக்கு படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்தார்கள்.
இன்று ரிலீஸ்: அந்த சான்றிதழோடு இன்று படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் டிக்கெட் முன்பதிவெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஜோராக நடந்தது. இருப்பினும், ஆன்லைனில் டிக்கெட் இருப்பது போன்று காண்பிக்கிறது; ஆனாலும் டிக்கெட் எடுக்க முடியவில்லை, டிக்கெட் கவுன்ட்டர்களிலேயே விலையானது 500, 1000 ரூபாய்வரை இருக்கிறது என்றெல்லாம் புலம்பி தள்ளினார்கள் ரசிகர்கள். மறுபக்கம் தியேட்டருக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் சிறுவர்கள், சிறுமிகள் அழும் வீடியோக்களும் வைரலாகின.
இப்படி பல சம்பவங்களுக்கு மத்தியில் அறிவித்தபடி இன்று ரிலீஸானது. தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேசமயம் பக்கத்து மாநிலங்களில் எல்லாம் ரகளையாக அதிகாலையிலேயே ரிலீஸாகிவிட்டது படம். பலரும் அங்கே படம் பார்க்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு படத்தின் டைட்டில் கார்டிலேயே மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்துவிட்டார் இயக்குநர் ஹெச்.வினோத்.
அதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைசர் சி. ஜோசப் விஜய் என்றுதான் டைட்டில் கார்டில் வரும் என ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க கூடுதல் மகிழ்ச்சி தரும் விதமாக, அந்த வாசகம் போடும்போது, சட்டப்பேரவையில் விஜய் செய்த ஆக்ஷனோடு போடுகிறார்கள். அது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட பரவச நிலையை கொடுக்க; தியேட்டரே இரண்டாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சட்டப்பேரவையில் அந்த ஆக்ஷனை செய்தபோது ஸ்டாலினை கலாய்ப்பதற்காகத்தான் அவர் செய்தார் என்ற பேச்சு இருந்தது; இப்போது அதே விஷயத்தை படத்தின் டைட்டிலிலேயே வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications

