ஜனநாயகன் ட்ரெய்லர்.. விஜய்யின் கடைசி படம் மெகா ஹிட்.. வினோத் கலக்கிட்டாரு.. ரசிகர்களுக்கு விருந்து!
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் எல்லாம் ஜோராக நடந்துவரும் நிலையில்; ட்ரெய்லர் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜனநாயகன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது. கண்டிப்பாக படம் ஹிட்தான் என்ற நம்பிக்கையும் தளபதி ரசிகர்களிடம் பிறந்திருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். கேவிஎன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது. இப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என பலரும் கூறினார்கள். ஆனால் அதை வினொத் அதை முழுவதுமாக மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை. எனவே எந்த மாதிரியான படத்தை அவர் ரசிகர்களுக்கு கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
கடைசி படம்: அரசியல் பிரவேசத்தை விஜய் செய்திருப்பதன் காரணமாக இதுதான் அவருடைய கடைசி படம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தாலும்; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்கிறாரா இல்லையா என்பது தெரியவரும். நிச்சயம் மே மாதத்துக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிடுவார் என்பது ஒருதரப்பினரின் திண்ணமான நம்பிக்கை.

பிஸ்னெஸ்ஸில் சூப்பர்: ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸை பொறுத்தவரை பட்டைய கிளப்பிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம், ஆடியோ உரிமம் என அனைத்தையும் சேர்த்து இதுவரை 200 கோடி ரூபாய்வரை படம் சம்பாதித்துவிட்டதாகவும்; நிச்சயம் வசூலிலும் பெரிய சாதனையை நிகழ்த்தும் எனவும் தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பத்தாம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தியும் வருவதால்; எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
இங்கே ஒன்பது மணி ஷோதான்: தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுக்காது என்றே தெரிகிறது. அதேசமயம் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆறு மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. எனவே அந்த மாநிலங்களுக்கு சென்று எவ்வளவு டிக்கெட் விலையாக இருந்தாலும் ஃபர்ஸ்ட் ஷோவை பார்ப்பதற்கு பெரும்பாலானோர் தயார் நிலையில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படத்தின் ட்ரெய்லர் எப்போதுதான் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள்.
ஜனநாயகன் ட்ரெய்லர்: இன்று படத்தின் ட்ரெய்லரை வெளிவரும் கேவிஎன் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி ஜனநாயகன் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ட்ரெய்லரை பார்க்கையில், ஹெச்.வினோத் சொன்ன மாதிரியே இது தளபதி படமாக இருக்கும் என உறுதியாக சொல்கிறார்கள் ரசிகர்கள். அதேசமயம் சில இடங்களில் பகவந்த் கேசரியின் வாடையும் அடிக்க தவறவில்லை என்பதும் அவர்களது கருத்து. அதுமட்டுமின்றி, படத்தில் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான காட்சிகளும் இருப்பது ட்ரெய்லர் மூலம் உறுதியாகியிருக்கிறது. எது எப்படியோ விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படக்கூடிய ஜனநாயகனின் ட்ரெய்லர் ஃபேன்ஸ் மத்தியில் வைரலாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











