பகவந்த் கேசரியே தான்.. கொள்ளையடிக்கிறதுக்கு அரசியல்.. ஐ அம் கம்மிங்.. ஜன நாயகன் டிரைலர் விமர்சனம்!
சென்னை: கேவிஎன் தயாரிப்பில் அ. வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியானது. ஜன நாயகன் படத்திற்கு இன்னமும் சென்சார் வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் இன்னமும் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கவில்லை.
தியேட்டர் ஓனர்களிடம் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை ஜன நாயகன் படக்குழு கேட்பதாக திருப்பூர் சுப்ரமணியம் வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்நிலையில், வெளியான ஜன நாயகன் டிரைலரை பார்த்த ரசிகர்கள் அப்படியே இது பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி தான் என போட்டு அடித்து வருகின்றனர்.

ஆனால், விஷுவல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் தனக்கான மாஸை பக்காவாக நிரூபித்துள்ளார். தமிழ் டப்பிங்கிலேயே பகவந்த் கேசரி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கிடைக்கும் நிலையில், ஜன நாயகன் படத்தை விஜய்க்காக மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
ஜன நாயகன் டிரைலர் எப்படி இருக்கு?: முன்னாள் போலீஸ் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் மரணத்தை தொடர்ந்து அவரது மகளை விஜய் வளர்க்கும் காட்சிகளும் ஸ்ரீலீலாவை எப்படி ராணுவத்தில் சேர்க்க பாலகிருஷ்ணா போராடுவாரோ அதே போல மமிதா பைஜுவை ராணுவத்தில் சேர்க்க விஜய் போராடுவதும் அதற்கு பூஜா ஹெக்டே உதவி பண்ணுவதுமாகவே கதை உள்ளது.

அர்ஜுன் ராம்பால் உலகத்திலேயே தான் தான் நம்பர் ஒன் ஆக வேண்டும் என ஒரு புராஜெக்ட்டை செயல்படுத்த நினைப்பது போல, பாபி தியோல் ஓம் எனும் புராஜெக்ட்டை அமல்படுத்த நினைக்க அதை விஜய் எப்படி தடுக்கிறார். மமிதா பைஜுவுக்கு கிளைமேக்ஸில் எப்படி வீரம் வருகிறது என்கிற கதை தான் ஜன நாயகன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.
அரசியல் வசனங்கள்: அரசியலுக்கு வந்தா நல்லது பண்ணனும், கொள்ளையடிக்கிறதுக்கும் கொலை பண்றதுக்கும் அரசியலுக்கு வரக்கூடாது என விஜய் அரசியல்வாதிகளை சாட்டை எடுத்து அடித்து திருத்துவது போன்ற காட்சிகளும், மக்களை திரட்டி கையில் தீப்பந்தத்துடன் வரும் காட்சிகளும், இரண்டாம் பாதி மற்றும் பாபி தியோல் உடனான போர்ஷன் எல்லாம் கொஞ்சம் பகவந்த் கேசரி படத்தில் இருந்து மாறுபட்டு உருவாக்கப்பட்டு இருப்பதும் டிரைலரில் தெளிவாக தெரிகிறது. விஜய்யின் ட்ரீட்மெண்ட்டுக்காகவே படத்தை பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விடுவார்கள். பகவந்த் கேசரி படம் பார்க்காத ரசிகர்களுக்கு செம ட்ரீட். அந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஜன நாயகன் பலத்த ஏமாற்றத்தையே கொடுக்கும் என்று தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











