ரிலீஸுக்கு முன்னாடியே ஜன நாயகன் லாபம்.. ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படம் ரிலீஸுக்கு முன்னாடியே மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கடந்த டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரசிகர்கள் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் வேறு எந்த சினிமா நிகழ்ச்சியும் இப்படியொரு சாதனையை அந்த ஸ்டேடியத்தில் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

Jana Nayagan turns into positive zone after the Malaysia Audio Launch
Photo Credit:

ஜன நாயகன் படத்துக்கு விஜய்யின் சம்பளம் மட்டுமே 250 கோடி என சொல்லப்படும் நிலையில், படத்தின் பட்ஜெட் அதிகபட்சமாக 350 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீஸுக்கு முன்பே லாபம்: ஜன நாயகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எந்தளவுக்கு வசூல் செய்கிறது என்கிற போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் விஜய்யின் கடைசி படம் என்பதால், ஆல் ஏரியாவிலும் ஏற்கனவே வியாபாரம் நடந்து விட்டது என்கின்றனர். கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாவதற்கு முன்பே ஆடியோ வெளியீட்டு விழாவுடன் மிகப்பெரிய லாபத்தை பார்த்து விட்டதாக கூறுகின்றனர்.

Jana Nayagan turns into positive zone after the Malaysia Audio Launch
Photo Credit:

ஒரு டிக்கெட் 55 ஆயிரம்: விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்ற நிலையில், விஜய்க்கு மிக அருகாமையில் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் ரசிகர்களுக்காக போடப்பட்டிருந்த MIP (Most Important Person) டிக்கெட் விலை மட்டும் 55 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. அந்த அரங்கில் கடைசி இடத்தில் பார்க்கக் கூடிய ரசிகர்களுக்கே உள்ளே அனுமதி டிக்கெட் ஒரு நபருக்கு 5 ஆயிரம் என்றும் ஒவ்வொரு வரிசைக்கு ஏற்ப 10 ஆயிரம், 15 ஆயிரம் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டதாக ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

80 கோடி வருமானம்: 80 ஆயிரம் ரசிகர்கள் சராசரியாக 10 ஆயிரம் செலவு செய்து ஜன நாயகன் ஆடியோ வெளியீட்டுக்கான டிக்கெட் வாங்கியிருந்தால் கூட 80 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்கின்றனர். தமிழ்நாடு, தென்னிந்திய மாநிலங்கள், ஓவர்சீஸ் என பல இடங்களிலும் விநியோகஸ்தர்கள் போட்டிப் போட்டு பெருந்தொகைக்கு படத்தை வாங்கியது மற்றும் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை, ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு விற்பனை என இப்போதே, கிட்டத்தட்ட 350 கோடிக்கும் அதிகமான வருமானத்தை தயாரிப்பு நிறுவனம் பார்த்து விட்டதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் போனஸ் தான் என்கின்றனர்.

500 கோடியாவது வசூல் வருமா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அதிகபட்சமாக 600 கோடி வசூல் எனக் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் 400 கோடி வசூலை கடந்தது. இந்நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பாக்ஸ் ஆபீஸில் 500 கோடி வசூலையாவது பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X