விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. என்ன ஜன நாயகன் வில்லன் இப்படி சொல்லிட்டாரு.. வேற லெவல்
சென்னை: விஜய் இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடித்துவருகிறார்கள். கண்டிப்பாக இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று படக்குழு உழைத்துவருகிறது. ஏனெனில் இப்படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் விஜய் குறித்து பாபி தியோல் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை தற்கால தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஹெச். வினோத் இயக்கிவருகிறார். இந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக படத்தின் மீது விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக இப்படத்தை வினோத் காலத்துக்கும் மறக்க முடியாத படமாக கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அட்டகாச போஸ்டர்கள்: படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் சூழலில் இப்படி ஒரு டைட்டில் வைத்திருப்பது ரசிகர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ஒரு போஸ்டர் நெய்வேலியில் விஜய் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்ததை நினைவுப்படுத்தும் விதத்திலும், இன்னொரு போஸ்டரில் விஜய் கையில் சாட்டையோடு இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பலரும் கண்டிப்பாக இந்தப் படம் அரசியல் ரீதியாகத்தான் இருக்கும் என்று உறுதிபட கூறிவருகிறார்கள்.
இறுதிக்கட்ட ஷூட்டிங்: அதேசமயம் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே இப்படம் அரசியல் ரீதியாக இருக்காது என்று வினோத் சொல்லியிருப்பதையும் ரசிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. நேற்றுகூட மகளிர் தினத்துக்கு ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்துதான் விஜய் தனது வாழ்த்தினை வீடியோ மூலம் தெரிவித்தார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் விஜய்யின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட தளபதி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறாரே ப்பா என்று ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.
ஐந்து பாடல்கள்: படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மொத்தம் இப்படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறதென்றும்; அவற்றில் ஒன்று, எம்ஜிஆர் நடித்து வாலி எழுதிய, 'நான் ஆணையிட்டால்' பாடலின் ரீமிக்ஸாக இருக்கலாம் என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் வில்லன் பாபி தியோல் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில்தான் அவர் விஜய் பற்றி பேசினார்.

பாபியின் பேச்சு: அவர் பேசுகையில், "விஜய் ரொம்பவே தன்னடக்கமானவர். அன்பானவர். எளிமையான மனிதர். அவருடன் பணியாற்றுவது அதீத இனிமையாக இருக்கிறது. எனக்கு எப்போதும் புதிய கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்கும். அதேபோல் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் விரும்புகிறேன். பிற மொழி படங்களில் நடித்தாலும் மொழியை தவிர்த்து வேறு எந்த வேற்றுமையும் எனக்கு தெரியவில்லை" என்றார். தர்மேந்திராவின் இளைய மகனான பாபி தியோல் தமிழில் கங்குவா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











