Jana Nayagan: ஜன நாயகனில் எம்ஜிஆர் சீன்.. அடக்கொடுமையே எல்லாத்தையும் இப்படி லீக் பண்ணிட்டாங்களே

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் மொத்த படத்தையும் மனசாட்சியே இல்லாமல் அரசிய்ல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லீக் செய்துள்ளதாக விஜய் ரசிகர்களும் படத்தின் தயாரிப்பு தரப்பும் கடும் விரக்தியில் உள்ளனர். இன்னொரு பக்கம் விஜய் தரப்பு தான் வேண்டுமென்றே படத்தை தேர்தலுக்கு முன்னதாக லீக் செய்து அனுதாபம் தேடுகின்றனர் என்கிற பழியையும் போட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விஜய் நினைத்திருந்தால் படத்தை எப்போதோ ஓவர்சீஸில் வெளியிட்டு, ஓடிடி நிறுவனத்துக்கு பெரிய தொகைக்கு விற்று இங்கேயும் லாபம் சம்பாதித்து தனது படத்தின் மூலம் சொல்ல வேண்டிய அரசியல் கருத்துக்களை சொல்லியிருப்பாரே என தவெகவினர் மற்றும் தளபதி ரசிகர்கள் எதிர் வாதங்களையும் வைத்து வருகின்றனர்.

Jana Nayagan whole movie including MGR scene got leaked shocks Kollywood and KVN
Photo Credit:

அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடம் விஜய் ரசிகர்கள் மன்றாடி கேட்டுக் கொண்ட நிலையிலும், தொடர்ந்து சமூக வலைதளம் முழுவதும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளாக மொத்த படமும் லீக் ஆகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் 500 கோடி ரூபாய் பிசினஸ் படம் என சொல்லியுள்ள நிலையில், அந்த படத்தை தியேட்டருக்கு வரவிடாமல் தொடர்ந்து தணிக்கை குழு இழுத்தடித்து வந்தது. கடைசியாக தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் மொத்த படமும் இணையத்தில் லீக்காகி ஏகப்பட்ட ரசிகர்கள் படத்தின் முக்கிய காட்சிகளை பைரஸியாகவே பார்த்து அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை டெலிட் செய்யவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என வலியுறுத்திய நிலையிலும், திமுக, அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் மற்றும் முகம் தெரியாத ஐடிக்கள் தொடர்ந்து ஜன நாயகன் படத்தை லீக் செய்வது மட்டுமின்றி இதை விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தான் செய்தனர் என பிளேட்டைத் திருப்பி பழியையும் போட்டுள்ளனர்.

எம்ஜிஆர் சீன் லீக்: ஜன நாயகன் படத்தில் பல இடங்களில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன என ஸ்க்ரீன் ஷாட்டுகளும், வீடியோ க்ளிப்களையும் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். வா வாத்தியார் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் எம்ஜிஆரை பயன்படுத்தியுள்ளனர்.

அட்லி, லோகேஷ், நெல்சன்: மேலும், விஜய் மீடியாவுக்கு பயப்படுவது போலவும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி மற்றும் நெல்சன் பத்திரிகையாளர்களாக வரும் காட்சிகள் என ஒட்டுமொத்த படமே இணையத்தில் கசிந்து விஜய் மற்றும் ஜன நாயகன் படக்குழுவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜன நாயகன் படம் எங்கே இருந்து கசிந்தது என்பதை கேவிஎன் தரப்பு கண்டுபிடித்து மான நஷ்ட வழக்கு தொடரவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X