பிப்ரவரியே டோட்டலா மாறப்போகுது.. ட்ரை மன்த்தா.. ஜனநாயகன் வந்தவுடனே ரூல்ஸ் மீறப்படும்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: ஜனநாயகன் படத்தின் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு தணிக்கை குழுவிடம் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்று பெறுவதற்காக முறையிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜனநாயகன் வழக்கு தொடர்பான அப்டேட்டோ அல்லது சென்சார் போர்ட் உயர் அதிகாரிகள் ஜனநாயகன் பற்றி வாய் திறக்கவோ இல்லாத சூழலில் ஜனநாயகன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் "Soon" என குறியீடாக ட்வீட் ஒன்றை போட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் சீக்கிரமே படத்துக்கு சென்சார் வாங்கி அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் தியேட்டர்கள் திருவிழாவாக மாறிவிடும் என்கின்றனர்.
சிக்கல் தீர்ந்தது: ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் ஜனவரி 9ம் தேதி முதல் இன்று வரை படம் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், விஜய் படத்துக்கான சிக்கல் தீர்ந்து விட்டதாகவே நெருங்கிய வட்டாரங்கள் உறுதியான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. கூடிய சீக்கிரமே ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவிக்கும் என்கின்றனர். தணிக்கை குழு ரிவைசிங் கமிட்டிக்கு ஜனநாயகன் படத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சம் 3 நாட்களில் ஜனநாயகன் படத்துக்கான தணிக்கை சான்று கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 20: வரும் பிப்ரவரி 20ம் தேதி ஜனநாயகன் திரைப்படம் எதிர்பார்த்தபடியே வெளியாகி விடும் எனக் கூறுகின்றனர். தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டால், பிப்ரவரி ட்ரை மன்த் என்பது எல்லாம் டோட்டலாக மாறிவிடும் என தளபதி விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளனர். ஜனநாயகன் திரைப்படத்தை இந்த மாதம் வெளியிட முடியவில்லை என்றால் அடுத்த மாதம் டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் நிலையில், நிச்சயமாக கேவிஎன் ரிஸ்க் எடுக்காது. அதன் பிறகு, தேர்தல் வந்துவிடும். மே மாதம் வரை ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் போனால் பல விநியோகஸ்தர்கள், ஓடிடி நிறுவனம் என பெரிய பாதிப்பு ஏற்படும்.
ரசிகர்கள் நம்பிக்கை: நீங்க ரிலீஸ் டேட்டை மட்டும் சொல்லுங்க, பிப்ரவரி மாதத்தில் வசூல் புரட்சியை எப்படி கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்பதை நாங்க பார்த்துக்குறோம் என ரசிகர்கள் ஃபயர் மோடில் ரெடியாகி விட்டனர். ஜனநாயகன் ரிலீஸ், தேர்தல் நெருங்கி வருவது என விஜய் செம பிசியாகி விடுவார் என்றே தெரிகிறது. தேர்தலுக்கு முன் ஜனநாயகன் திரைப்படம் வெளியானால் அது விஜய்க்குத் தான் மைலேஜ் என்றும் ஏற்கனவே ஏகப்பட்ட Poll களில் மக்கள் விஜய்க்கு ஆதரவை வெளிப்படையாக தெரிவித்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











