Jana Nayagan: ஜூலை 23ம் தேதியே ஜன நாயகன் ரிலீஸ்.. 22ம் தேதி ஸ்பெஷல் ப்ரீமியர் இருக்குமா?
சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்பாகவே வியாழக்கிழமையே படம் வெளியாகப் போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் கேவிஎன் புதிய டிரைலரையும் வெளியிடும் என்கின்றனர்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் படம் உருவாகி இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியே வெளியாக வேண்டியது.

ஆனால், சென்சார் குழு படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து தடுத்து வந்த நிலையில், கடைசியாக ஏ சான்றிதழ் உடன் ஜன நாயகன் படத்தை அடுத்த வாரம் படக்குழு வெளியிடுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் டைட்டில்: ஜனவரி மாதமே ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்திருந்தால் தளபதி விஜய் என்று வந்திருக்கும். தேர்தலுக்கு பிறகு என்றால் மாண்புமிகு முதலமைச்சர் என்று தான் டைட்டில் வரும் என ரசிகர்கள் சொன்னதை சாதித்துக் காட்டியுள்ளார் விஜய். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது முதல் தேர்தலில் 2 இடங்களில் எம்எல்ஏ ஆகவும் வெற்றிப் பெற்று மாஸ் காட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றிப் பெற்றது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத தரமான செய்கை என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்: கடந்த மாதமே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ஜூலை 9ம் தேதி தான் தணிக்கை வாரியம் ஜன நாயகன் படத்துக்கு இறுதியாக அத்தனை மியூட்களையும் அத்தனை மாற்றங்களையும் கொடுத்த பின்னரும் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. குழந்தைகள் விஜய் படத்தை பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், வரும் ஜூலை 23ம் தேதியே ஜன நாயகன் திரையரங்குகளில் 18 வயதை கடந்த அனைத்து விஜய் ரசிகர்களும் பார்க்க வெளியாகப் போகிறது என சூடான தகவல்கள் கசிந்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் கேவிஎன் வெளியிடும் என்கின்றனர்.
ஜன நாயகன் ப்ரீமியர் ஷோ இருக்குமா?: வியாழக்கிழமையே படம் வெளியானால் 4 நாட்கள் உலகளவில் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதன் கிழமை இரவு அதாவது ஜூலை 22ம் தேதி இரவு ப்ரீமியர் ஷோ இருக்குமா? என்கிற கேள்விகளையும் விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். முழு படமும் லீக் ஆனாலும், தளபதியை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என விரதம் இருந்து வரும் ரசிகர்களுக்கு சிஎம் விஜய் நடிக்கும் ஜன நாயகன் என டைட்டில் கார்டு பார்த்தாலே லைஃப் டைம் செட்டில்மென்ட் தான்.


Click it and Unblock the Notifications