»   »  குடும்பம் ஒரு அழகான பிரேம்... அதில் சிறு கீறல் விழுந்தாலும் அலங்கோலமாகிவிடும்!

குடும்பம் ஒரு அழகான பிரேம்... அதில் சிறு கீறல் விழுந்தாலும் அலங்கோலமாகிவிடும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொட்ராக் பிலிம்ஸ் சார்பில் கே.போட்டால் முத்து தயாரிப்பில், ஃபார்ம்யார்ட் எஸ்.சரணவன் வெளியிடும் படம் 'மனதில் ஒரு மாற்றம்'.

இப்படத்தில் நாயகனாக மதனும், நாயகியாக ஸ்பூர்த்தியும் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜனா வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வல்லினம் படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற வி.ஜே.சாபு ஜோசப் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசை வாரிசு...

இசை வாரிசு...

மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும் ஹாஜீ அனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றிய சாய் நந்தா இப்படத்திற்கு ஒளிப்பதிவு. இசை ஸ்ரீசாஸ்தா. இவருடைய தந்தை பூபதி மலையாளத்தில் நூற்றுக்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை...

கலை...

இயக்குநர் பாலாஜி சக்திவேல் படங்களில் பணியாற்றிய மயில் கிருஷ்ணன் இப்படத்திற்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

சிறு கீறலும் அலங்கோலம் தான்...

சிறு கீறலும் அலங்கோலம் தான்...

இப்படத்தின் ஒரு போஸ்டரில் நாயகன் மற்றும் நாயகியின் தனித்தனி குடும்பப் போட்டோக்கள் உள்ளது. அதில் நாயகன் மற்றும் நாயகியின் முகம் மற்றும் சிதைக்கப் பட்டது போன்று உள்ளது. இதன் மூலம் குடும்பம் என்பது அழகான பிரேம், அதில் சிறு கீறல் விழுந்தாலும் அலங்கோலம் தான் என்ற மெசேஜ் உள்ளது.

யார் மனதில் மாற்றம்..?

யார் மனதில் மாற்றம்..?

வழக்கம் போல இதுவும் காதல் கதை தான் என்பது படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. அதில் என்ன வித்தியாசமாகச் சொல்லி இருக்கிறார்கள், யார் மனதில் இந்த மாற்றம் ஏற்பட்டது என்பதற்கெல்லாம் பதில் திரையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இளைஞர்களின் திருவிழா...

இளைஞர்களின் திருவிழா...

இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சென்சாரில் யு சான்றிதழ் பெற்ற இப்படம் இளைஞர்களின் திருவிழாவாக கொண்டாடப் படும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

English summary
Manadhil Oru Maatram Tamil Movie Directed by Jana Vengate and Produced by P Gomathi, P Raja Lakshmi. P Durga Lakshmi Muthu under Kortak Films banner.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil