திரைத் துளி

By Staff

அஜீத் நடித்து வரும் ஜனா படத்தில் நடிக்க இருந்த நடிகை ரஞ்சிதா கடைசி நேரத்தில் விலகிவிட்டார்.

ஏன் என்று கேட்டால் கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அவர் கூறியதாவது:

ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஜனா படத்தின் நடிக்கக் கூப்பிட்டார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். என்ன ரோல்என்று கேட்டேன். அஜீத்துக்கு அக்கா ரோல் என்றார்கள். நான் திரையுலகுக்கு வந்தபோது அறிமுகமானவருக்கேஅக்காவாக நடிக்கச் சொல்கிறார்களே என்று வருத்தம் இருந்தது. ஆனால், திருமணமாகிவிட்ட நடிகைகளுக்கு ஏற்படும் நிலைதானே இது என்று என்னை நானே தேற்றிக் கொண்டு அந்த ரோலை ஏற்றேன்.

கேரளாவில் சூட்டிங் என்று அழைத்தார்கள். போனேன். அங்கு போனால் 7 வயது குழந்தைக்கு அம்மா என்று என் ரோலையேமாற்றினார்கள். எல்லோரையும் திட்டிவிட்டுத் திரும்பி வந்துவிட்டேன்.

இத போதாது என்று டைரக்டர் வெங்கடேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தால் சிலம்பரசனுக்கு அம்மாவாகநடிக்க வேண்டும் என்றார்கள். கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

திருமணம் ஆகிவிட்டால் நடிகைகளை இப்படியா நடத்துவது? என்று பொறிந்து தள்ளினார்.

இதற்கிடையே ஜனா படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. கிளைமாக்ஸ் காட்சிகள் தான் பாக்கி. மார்ச் மாதம்படம் ரிலீஸ் ஆகிவிடும் என்கிறார் டைரக்டர் ஷாஜி கைலாஷ். ஸ்னேகாவுடன் அஜீத் ஜோடி சேர்ந்திருக்கும் இப் படத்துக்கு இசையுவன்சங்கர் ராஜா.

ஜோவின் பழைய பைலட் காதலர்

சூர்யாவுடன் லவ்வில் இருக்கும் ஜோதிகாவுக்கு முன்பு ஒரு பைலட் காதலர் இருந்தாராம். இரு ஆண்டுகளுக்கு முன்ஜோதிகா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நெருக்கினாராம்.ஆனால், அப்போது ஜோ நோ சொன்னதால் அவர் திருமணம் முடித்து செட்டில் ஆகிவிட்டாராம். இதையெல்லாம்சூர்யாவிடமும் முழு விவரமாகவே டிஸ்கஸ் செய்துவிட்டாராம் ஜோ.

மீண்டும் சிம்சுடன் கமல்

மாதவனை ஹீரோவாகப் போட்டு கமல்ஹாசன் தயாரித்து வரும் நளதமயந்தி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாகநடந்து வருகிறது. மீடியம் பட்ஜெட் படமான நளதமயந்திமுழுக்கமுழுக்க காமெடி படம்தானாம்.நளதமயந்திக்குப் பிறகு கமல் தயாரிக்கப் போகும் படத்தில் மீண்டும் அவருடன் சிம்ரன் ஜோடி சேருகிறாராம்.இந்தப் படத்துக்கு கதை இன்னும்முடிவாகவில்லையாம். அது சரி, கதையா இப்போமுக்கியம்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X