JSK First Review: ‘ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா‘ படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம்!

சென்னை: மலையாள திரையுலகில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜே. ஃபணீந்திர குமார் மற்றும் சேது ராமன் நாயர் கனகோல் தயாரிப்பாளர்களாக இணைந்து உருவாக்கிய திரைப்படம் ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா(JSK). பிரவீண் நாராயணன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அனுபம் பரமேஸ்வரன், சுரேஷ் கோபி, திலீப், ஸ்ருதி ராமச்சந்திரன், திவ்யா பிள்ளை மாதவ் சுரேஷ், பைஜு சந்தோஷ், கோட்டயம் ரமேஷ், ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் எடிட்டிங் சம்ஜித் முகமது, ஒளிப்பதிவு ரெனாதிவே, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சென்சார் போர்டு பிரச்சினையில் சிக்கிய இப்படம் 17ந் தேதி வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் முதல் விமர்சனத்தை பார்க்கலாம்.

"ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா" திரைப்படத்தின் கதை என்ன வென்றால், பெங்களூரில் ஐடி ஊழியராக இருக்கும் ஜானகி (அனுபமா பரமேஸ்வரன்) விடுமுறையை கழிப்பதற்காக கேரளாவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கு சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் ஜானகி. தனக்கு நடந்த கொடுமைக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் சட்டத்தின் முன் நிற்கிறாள். நீதித்துறையில் உள்ள குறைபாடுகளால் ஜானகி வாழ்க்கையில் பல போராட்டத்தை சந்திக்கிறாள். பின் வழக்கறிஞர் ஏபல் டோனோவன் (சுரேஷ் கோபி)வை உதவியை நாடுகிறாள். அதன் பின் ஜானகிக்கு நீதி கிடைத்ததா? கேரள நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு என்ன தீர்ப்பு கிடைத்தது என்பது தான் கதை.

JSK First Review Anupama JSK
Photo Credit:

ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா: நீதித்துறையில் இருக்கும் குறைகளை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூன் 27ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் எந்த காட்சியையும் நீக்காமல் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். ஜானகி என்றால் ராமர் மனைவி சீதாதேவியின் பெயரை குறிக்கிறது என்றும்,மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், படத்தின் தலைப்பையும் கதாநாயகியின் பெயரையும் மாற்றுமாறு படத்திற்கு மத்திய தணிக்கைகுழு தடை விதித்து படத்தை வெளியிட தடை விதித்தது.

8 கட்டுகள்: இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் கேரளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அதன்பின் தயாரிப்பாளர் பிரவீன் நாராயணன் மற்றும் திரைப்பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி படத்தின் தலைப்பில் உள்ள ஜானகி பெயரை நீக்க ஒப்புக்கொண்டனர். மேலும் நீதிமன்றத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நீக்கவும் படக்குழுவினர் ஒப்புக்கொண்டது. இதையடுத்து மொத்தம் 8 கட்டுகளுடன் படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது.

சிறப்பான நடிப்பு: எடிட் செய்யப்பட்ட படத்தை பார்த்த பிறகு, படத்தை வெளியிட சென்சார் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இந்த படத்தில் சுரேஷ் கோபி, மாதவ் மற்றும் அனுபம் பரமேஸ்வரன் ஆகியோரின் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் படத்தின் கதை தேர்வு, திரைக்கதை என அதையும் நன்றாக கொண்டு சென்றுள்ளார் இயக்குநர். நடிகர் சுரேஷ் கோபி நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி இவரின் மகன் மாதவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அனுபம் பரமேஸ்வரன் நீண்ட வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கிறார். அனைத்து தடைகளையும் தகர்த்து இப்படம் பான் இந்திய திரைப்படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வரும் 17ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X