ஜனநாயகன் FDFS டிக்கெட் இன்னும் வெச்சுட்டு இருக்கீங்களா.. இப்பதான் மொத்தமா எல்லாமே மாறிடுச்சே
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக தயாராக உள்ள படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு வெளியீட்டு சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிட முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜன நாயகன் படத்திற்கான சில நாட்களுக்கு டிக்கெட் விற்பனை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. படம் வெளியாகாததால் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் மட்டும் திரும்பப் பெறவில்லை, அதே நேரத்தில் அதற்கான பணமும் திரும்ப பெறப்படவில்லை. இப்படி இருக்கையில் ஜன நாயகன் படம் வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேம் நேரத்தில் படத்தை அதிகாலை நான்கு மணிக்கே ரிலீஸ் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக இருந்தாலும், ஏற்கனவே முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி, அந்த டிக்கெட்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கும் விஜய் ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
அதிகாலை 4 மணிக் காட்சி: அதாவது படத்தை அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்தால் நமது கையில் இருக்கும் டிக்கெட் அந்த காட்சியை பார்க்க பொருந்துமா? இல்லை காலை 9 மணிக்குதான் நாம் படம் பார்க்க முடியுமா? இல்லை இந்த டிக்கெட்டுகளை மொத்தமாக கேன்சல் செய்யப் போகிறார்களா? அப்படி கேன்சல் செய்தால் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை, வழக்கமான அடிப்படை விலையில் இருந்து பல மடங்கு அதிக விலைக்கு வாங்கினோமே, அந்த பணமே திரும்பக் கிடைக்குமா? இல்லை அதுவும் கிடைக்காதா? என பல குழப்பங்களுடன் இருக்கிறார்கள்.

அதிக விலைக்கு டிக்கெட்: மொத்தத்தில் ஜன நாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு பெரும்பாலான தியேட்டர்களில் தவெகவினரே அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றதாக படம் முதற்கட்டமாக வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நாட்களில் சமூக வலைதளங்களில் ஆடியோக்களும், சில முன்னணி செய்தி நிறுவனங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications