Jana Nayagan Leak: 3 முக்கிய குற்றவாளிகள் கைது.. ஜன நாயகன் லீக் ஆன விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் அதிரடி

சென்னை: நடிகர் விஜய்ம் நடிப்பில் உருவாகி வெளியாவதற்கு முறையான சான்றிதழ் பெற காத்துக் கொண்டு இருந்த படம் ஜன நாயகன். இந்த படத்தின் ஹெச்.டி தரத்திலான முழு படமும் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியைக் கிளப்பியது. இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தியது. இப்படி இருக்கையில் தற்போது முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

Jananayagan Leak Case Three Key Accused Arrested as Cyber Crime Investigation Intensifies

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதுமே அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். மேலும் அவர் கமிட் ஆன ஜன நாயகன் படம் தான் அவரது கடைசி படம் என்று அறிவித்தார். இப்படி இருக்கும் போது இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்கினார். படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இந்த படத்திற்கு நடிகர் விஜய் ரூபாய் 200 கோடிகளில் இருந்து ரூபாய் 235 கோடிகள் வரை சம்பளமாக வாங்கினார் என்று கூறப்படுகிறது.

ரிலீஸ் பிரச்னை: இந்த படத்தை முதலில் கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. அதன் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர். ஆனால் படத்தின் ரிலீஸ்க்கான சான்றிதழை வாங்காமல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது பெரும் சிக்கலை படக்குழுவுக்கு ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் படத்தின் சான்றிதழ் கிடைக்காததால் படம் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. படம் இணையத்தில் லீக் ஆனது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக படக்குழுவினர், திரையுலகினர் விஜய் ரசிகர்களில் சிலருக்கு என்று பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

9 பேர் கைது: இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்தால் வழக்கை விசாரிப்போம் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்தது. ஆனால் இதுவரை படக்குழு நீதிமன்றத்தை நாடவில்லை. அதேபோல் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஏற்கனவே 6 பேரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகள் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் யார் யார் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவிக்கவில்லை.

லீக் ஆனது எப்படி?: குற்றவாளிகள் குறித்து அவர்கள் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்கள் என்றால் அது, ஜன நாயகன் படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த ஸ்டூடியோவில் தான் படத்தை இணையத்தில் லீக் செய்தவர்களும் ஃப்ரீ லான்சராக வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். ஆனால் இந்த குற்றவாளிகள் வேறு படத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் மூலமாகத்தான் படம் லீக் ஆகி உள்ளது. அவர்கள் இணைந்துதான் படத்தை திருடி, இணையத்தில் லீக் செய்துள்ளனர். கைது செயப்பட்ட 9 பேரும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: jananayagan vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X