Vijay: ஜன நாயகன் லீக் தொடர்பாக விஜய் பேசாதது ஏன் தெரியுமா? காரணத்தை பொதுவெளியில் உடைத்த பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த படம் ஜனநாயகன். இந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போனது. மிக முக்கியமாக படத்தின் ரிலீஸ் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி மாறியது. இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்து எந்த தகவலும் படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் கடந்த வாரத்தில் ஜனநாயகன் முழு படமும் எச்டி தரத்தில் இணையத்தில் லீக் ஆகி பெரிய அதிர்ச்சியை மொத்த படக்குழுவினருக்கும் திரையுலகத்திற்கும் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மொத்த படக்குழுவினரும் கண்டனங்களை தெரிவித்து விட்டனர். அதேபோல் மொத்த திரையுலகத்தினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து விட்டனர். ஆனால் நடிகர் விஜய் மட்டும் இதுவரை எதுவும் பேசாமல் இருக்கிறார். இப்படி இருக்கையில் விஜய் ஏன் இது தொடர்பாக இன்னும் வாய் திறக்கவில்லை என்பது குறித்து விஜய்க்கு நெருக்கமானவர் தெரிவித்துள்ள தகவல் வளரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இந்த படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்க எச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் ஜனநாயகன் படமே அவரது கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஜனநாயகன் படம் கடந்த வாரத்தில் லீக்கானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்தை 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கமாக வைத்து தான் விஜய் தரப்பில் உருவாக்கியுள்ளார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கையில் படத்தை முறையாக ரிலீஸ் செய்ய சான்றிதழ் கிடைக்காததால் விஜய் தரப்பிலேயே இந்த படத்தை லீக் செய்திருக்கலாம்; அரசியல் நோக்குடன் இப்படி விஜய் செயல்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சிலர் நேரடியாகவே விஜய்யை விமர்சித்தனர்.
விஜய் ரியாக்ஷன்: ஆனால் இந்த லீக் தொடர்பாக விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதே நேரத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக எந்த கண்டன பதிவுகளையும் பதிவிடவில்லை. பொதுவாகவே நடிகர் விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது பல பிரச்சனைகள் வருவது என்பது கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். இதையெல்லாம் தெரிந்துதான் விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவது; தயாரிப்பாளர்களுடன் இது தொடர்பாக முன்கூட்டியே அறிவுறுத்துவது என செய்து வருகிறார்.

எதிர்பார்க்காத ஒன்று: ஆனால் ஜனநாயகன் படத்திற்கு நடைபெற்ற விஷயம் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. மேலும் விஜய் தரப்பிலிருந்து தான் இந்த படத்தை லீக் செய்து விட்டார்கள் என்று குற்றம் சுமத்துபவர்கள் அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் விஜய்யிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது விஜய் எதுவும் பேசவில்லை.
காரணம் இதுதான்: தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக அமைப்பாளரும் துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ அர்ஜுனா பிரச்சார மேடையில் பேசுகையில், விஜய் இது தொடர்பாக பேசாமல் இருப்பதற்கு காரணம், அவருடைய முழு கவனமும் மக்கள் மீதும், ஒரு நல்ல அரசை கட்டமைப்பதன் மீதும் தான் இருக்கிறது. இதற்கிடையில் தனது சொந்த லாப நஷ்டங்களை அவர் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் தான் ஜனநாயகன் லீக் தொடர்பாக அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து மக்களை சிந்தித்து பிரசாரம் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











