TVK வுக்குத்தான் என்னோட ஓட்டு.. சந்தேகமே வேண்டாம் விஜய்யால் தான் மாற்றம் நிகழும்.. பிரஜின் பளிச்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் ஜனநாயகன். ஏற்கனவே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் என்றாலும் படத்தின் இயக்குனரான ஹெச். வினோத், விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் என்று படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது.
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படம் ஜனநாயகன். முதலில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், அதன் பின்னர் படத்தை 2026 ஜனவரிக்கு ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு பணியாற்றியது. இது விஜயின் கடைசி படம் என்று அறிவித்திருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பி இருந்தனர்.
படத்திற்கான புக்கிங் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று டிக்கெட்டுகள் எல்லாம் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்தது. ஆனால் படத்துக்கு ரிலீஸ் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் சட்ட சிக்கலால் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. இந்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது.

இப்படி இருக்கையில் ஜனநாயகன் படத்தை அடையாளம் தெரியாத நபர் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் செய்தார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் முதல் கட்டமாக ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடுமையான தண்டனை: இது தொடர்பாக பிரஜன் கூறும் போது ஒரு படம் இணையத்தில் கசிய வேண்டும், லீக் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் திரைப்படத் துறையைச் சார்ந்த யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இந்த படத்தை லீக் செய்தது ஜனநாயகன் பட குழு தான் என்று கூறுவது மிக மிக தவறான ஒரு விஷயம். அதேபோல் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக செய்திகளில் பார்த்தேன். குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும். இந்தப் படத்தை லீக் செய்தவர்களை விட்டு விட்டால் அதன் பின்னர் மற்ற அனைத்து படங்களையும் அவர்கள் தொடர்ந்து லீக் செய்து கொண்டே இருப்பார்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மாற்றம்: இவ்வளவு நாட்களாக ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நல்லது செய்துள்ளனர், மாற்றம் ஏற்பட்டு விட்டதா என்று நான் மட்டும் சொல்லி விட முடியாது. மாற்றம் வராததால் தான் நீங்கள் மாற்றம் வருமா என்று கேள்வி கேட்கிறீர்கள். நிச்சயம் விஜய் மூலம் கட்டாயம் மாற்றம் வரும் என்று எல்லோரும் நம்புவோம். நான் இதற்கு முன்னர் அனைத்து கட்சிகளுக்கும் ஓட்டு போட்டுள்ளேன் அவர்களும் அவர்களால் முடிந்த வரை செய்துள்ளனர்.
தவெகவுக்குத்தான் ஓட்டு: இந்த முறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தான் வாக்களிப்பேன் அவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் அவரும் அவரால் முடிந்ததை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது ஆகையால் இம்முறை நான் தமிழக வெற்றிக்காக போடுவேன். பலரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று கூறுகிறார்கள் ஆனால் அந்த கூட்டம் ஓட்டாக மாறும் என்று நான் நம்புகிறேன். ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் அது தேர்தலில் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











