அப்பாடா ஒரு வழியா தடுப்பூசி போட்டாச்சு… பெருமூச்சு விட்ட பிக்பாஸ் பிரபலம் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் புகழ் பெற்ற ஜனனி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
திரைப்பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பகிர்வதால் அது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைகிறது.
இதனால் பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறையும் கொரோனா
தமிழகத்தில் கடந்த மே 10ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலிருந்து வருகிறது. கொரோனாதொற்று குறையாததால் முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 36 ஆயிரம் என்ற தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

தளர்வுகளுடன் ஊரடங்கு
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, 7-ந் தேதியில் இருந்து சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை.

விழிப்புணர்வு
கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதே சிறந்த ஒன்றாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சம் இருந்து வருகிறது. இதனால், தமிழக அரசு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தடுப்பூசி
அரசியல் கட்சித் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஜனனி தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வாக உள்ளது.
Recommended Video

பாராட்டு
பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஜனனி. தற்போது பஹிரா, முன்னறிவான், வேழம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடை பெயரில் இருந்த ஜாதியை நீக்கி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார்.


Click it and Unblock the Notifications











