ஜனனி, ஐஸ்வர்யாமேனன் கண்களில் யார் கண் மிக அழகு?... அசோக்செல்வன் சொன்ன சாமர்த்தியமான பதில்

சென்னை: அசோக் செல்வன் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், வேழம் படத்தில் நடிகைகளை டார்ச்சர் செய்ததாகவும் புன்னைகையுடன் தெரிவித்தார்.

Recommended Video

இந்த பக்கம் ஜனனி, இந்த பக்கம் ஐஸ்வர்யா | Ashok கலகல Speech | Vezham *Kollywood | Filmibeat Tamil

சமீப காலங்களில் வித்யாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வன், இந்த முறை ஒரு பக்கா திரில்லர் படத்தை தேர்ந்து எடுத்து நடித்து உள்ளார்.

வேழம் படத்தில் நடித்துள்ள அசோக் செல்வன், நடிகைகள் ஜனனி , ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

 கொலையாளி யார்?

கொலையாளி யார்?

கேள்வி: அசோக்செல்வன், நீங்கள் நடித்துள்ள வேழம் படத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது?

பதில்: வேழம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் நான் கதாநாயகிகளுடன் நடிக்கவில்லை, ஜனனி, ஐஸ்வர்யா மேனன் என்ற இரண்டு யானைகளுடன் நடித்துள்ளேன்.அதவாது நடிப்பு திறமையை யானை பலம் போலே காட்டும் பெண்கள். இப்படத்தில் கதையானது, ஒரு கிறிஸ்டியன் பெண் இறந்து விடுகிறாள். அந்த பெண்ணை கொலை செய்த கொலையாளி யார் என்ற விபரம் தெரியாது. ஆனால் கொலையாளியின் வாய்ஸ் மட்டும் தான் தெரியும். அதை வைத்து கொலையாளி கண்டுபிடிக்கப்படுகிறானா? இல்லையா என்பது தான் கதை. கொலையாளி கொலை செய்யும்போது, அவன் பேசிய வார்த்தைகளை வைத்து கொலையாளியை கண்டுபிடிப்பது தான் ஒட்டு மொத்த சுவாரஸ்யம் .படம் பார்த்தவர்கள் அனைவரும் இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

 கேமரா முன்பு சிரிக்க வேண்டும்

கேமரா முன்பு சிரிக்க வேண்டும்

கேள்வி: ஐஸ்வர்யா மேனன், இப்படத்தில் உங்களுக்கு பல விதமான காஸ்டியூம்? அது குறித்து நீங்கள் கூற விரும்புவது,,,,

பதில் :நான் லீனா ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் கிறிஸ்டியன் பெண்ணாக நடித்தேன் . அந்த கதாபாத்திரத்திற்கு என்ன காஸ்டியூம் தேவையோ, அதை மட்டுமே நான் செய்திருக்கிறேன். லீனா ஜோசப்பிற்கு நிறைய காயங்கள் இருந்தது. அந்த கதாபாத்திரம், ஏன் படத்தில் செத்து போகிறாள் என்பதை திரையில் பாருங்கள். இப்படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. நடிகையாக திருப்தியடைந்தேன் . மேலும் அவர் கூறுகையில், படத்தில் நான் இறந்தத காட்சி நடித்தவுடன், கேமரா முன்பு நின்று சிரிக்க வேண்டும் என்று நடிகர் அசோக் செல்வன் கூறினார். அதன்படி நானும் செய்தேன் என்றார்.

 ரொம்ப டார்ச்சர் செய்வேன்

ரொம்ப டார்ச்சர் செய்வேன்

கேள்வி: 2 ஹீரோயின் கான்செப்ட், ஜனனி உங்களுக்கும் ஐஸ்வர்யாமேனனுடன் நடித்தது எவ்வாறு இருந்தது?

பதில் : எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காம்பினேஷன் இல்லை. அசோக் உடன் தான் காம்பினேஷன். ஏற்கனவே நான் அவருடன் ஒரு படத்தில் நடித்துள்ளதால் எனக்கு ஈஸியாக இருந்தது. என்னை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த நண்பர். படப்பிடிப்பின்போது அசோக்செல்வன் அதிகமாக பேச மாட்டார். நான் தான் அவரை ரொம்ப டார்ச்சர் செய்வேன் என்றார்.

 ஒவ்வொருவரிடமும் அழகான விஷயங்கள்...

ஒவ்வொருவரிடமும் அழகான விஷயங்கள்...

கேள்வி: அசோக், இப்படத்தில் நடித்த கதாநாயகிகளின் கண்களில் உங்களை கவர்ந்த கண் எது?

பதில் : பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நடிக்கும் படங்களில், எப்பொழுதும் ஹீரோயினை தேர்ந்தெடுப்பதில்லை. அது போல் எனக்கு இந்த ஹீரோயின் தான் பிடிக்கும் என்று நான் கூறுவதில்லை. அப்படி கூறினால் நான் யாரையும் ரசிக்கவில்லை என்று அர்த்தம். ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு அழகான விஷயங்கள் உள்ளன. சிலரிடம் குறைவான அழகான விஷயங்கள் இருக்கும் .இன்னொருவரிடம் வேறு ஒரு விஷயம், அல்லது அவர்களது திறமை அழகாக இருக்கும் .இப்படி எல்லாமே எனக்கு ஜாலி தான் என்று சிரித்த படி சாமர்த்தியமாக பேசினார்.

 ஜனனி குரல் நன்றாக இருக்கும்

ஜனனி குரல் நன்றாக இருக்கும்

கேள்வி: அசோக், உங்களுக்கு பிடித்த பாடல் எது?

பதில் : இப்படத்தில் இரண்டு மெலோடி பாடல்கள் உள்ளன. நடிகை ஐஸ்வர்யா மேனனுடன் "தூரம்" என்ற பாடலும், ஜனனியுடன் "மாறும் உறவே" என்ற பாடலும் உள்ளது. இரண்டு பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரிஜினல் பாடகர் தீபிகாவை விட ஜனனி குரல் நன்றாக இருக்கும் என்றார். மேலும் தெகிடி படத்தில் இடம்பெற்ற விண்மீன் விதைகள் பாடலை ஜனனியும், அசோக் செல்வனும் இணைந்து பாடிக்காட்டினார்கள் இந்த பேட்டியில் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் தெகிடியின் இரண்டாம் பாகம் வருவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும், வந்தால் நன்றாக இருக்கும் என்றார் அசோக்.

 நித்தம் ஒரு வானத்தின் எதிர்பார்ப்பு

நித்தம் ஒரு வானத்தின் எதிர்பார்ப்பு

கேள்வி: அசோக்செல்வன், இப்படத்தின் உங்களுடைய சிறப்பம்சம் என்ன?

பதில்: இதுவரை நான் நடித்த படங்கள் பெரும்பாலும் டிராமா, காதல் போன்றவை தான் இருக்கும். முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளேன். நன்றாக செய்துள்ளதாக எனது மனதுக்கு தோன்றுகிறது. ஆக்சன் காட்சிகளில் நான் நடித்தது எப்படியிருந்தது என்பதை ரசிகர்கள் தான் கூற வேண்டும் . இப்படத்தில் ஜனனி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோரை, தான் டார்ச்சர் செய்து உள்ளேன் . மேலும் தனது அடுத்த படமான "நித்தம் ஒரு வானம்" படத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"ரா"ஏஜென்ட் மற்றும் வெப்சீரிஸ்

கேள்வி: ஐஸ்வர்யாமேனன், உங்களுடைய அடுத்த படங்கள் என்னென்ன?

பதில் : நான் தற்போது நான்கு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். "ரா" ஏஜென்டாக "ஸ்பை" என்ற படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. மேலும் கார்த்திகேயா என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். மேலும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்தார்.

கேள்வி: ஜனனி, உங்கள் கைவசம் எத்தனை படங்கள் உள்ளன?

பதில் : நான், நடிகர் பிரபுதேவாவுடன் பஹீரா படத்தில் நடித்து வருகிறேன். மேலும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் வெப் சீரியஸில் நடித்து வருகிறேன். நடிகர் பரத்துடன் இரண்டு படங்களிலும், டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோருடன் இணைந்து மற்றொரு வெப்சீரியஸிலும் நடித்து வருவதாக தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=VxZf5NWBfFc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகர் அசோக் செல்வன், நடிகைகள் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X