நடுக்கடலில் ஊஞ்சலில் ஹாயாக படுத்துக்கொண்டு.. இப்படி கூட விட்டமின் சி பெறலாம்!
மாலத்தீவு : பரத்துடன் இணைந்து முன்னறிவான்,யாக்கை திரி என தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜனனி ஐயர்.
பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியிருக்கும் பஹீரா திரைப்படத்தில் 7 கதாநாயகிகளில் ஒருவராக ஜனனி நடித்திருக்க இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
மாலத்தீவுக்கு சென்ற நடிகைகளின் பட்டியல்கள் நீண்டுகொண்டே போக அதில் ஜனனி ஐயரும் சமீபத்தில் இணைந்து இருக்க அங்கு நடுக்கடலில் ஊஞ்சலில் செம ஹாயாக படுத்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையதளத்தை ஹாட்டாக்கி உள்ளார்.

விஷாலுடன் காமெடி
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான நடிகை ஜனனி ஐயருக்கு பாலாவின் அவன் இவன் கதாநாயகி அந்தஸ்தை கொடுத்தது. இதில் போலீஸ் அதிகாரியாக செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜனனி ஐயர் அதேசமயம் விஷாலுடன் காமெடி காட்சிகளிலும் நடித்தது அனைவரையும் கவர்ந்திருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்
தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும் எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்து அங்கும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜனனி ஐயர் 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்திற்கு பிறகு பல கோடி ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிப்போனார். துளியும் கவர்ச்சி காட்டாமல் இன்று வரை பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை பயணித்தார்.

இரண்டு திரைப்படங்களில்
நடிகர் பரத்துடன் இணைந்து இதுவரை பணியாற்றாத ஜனனி ஐயர் இப்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என இரண்டு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்கள் இவரின் நடிப்பில் உருவாகி வருகிறது.
Recommended Video

விட்டமின் சி
ஏற்கனவே பல நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வலைதளத்தை தெறிக்கவிட்டது இன்னும் ஓயாத நிலையில் சென்ற மாதம் சம்மர் ஹாலிடேவுக்கு குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற இடத்தில் குஷி படுத்தும் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் தற்போது நடுகடலில் ஊஞ்சலில் ஹாயாக படுத்துக்கொண்டு விட்டமின் சி கிடைக்கும் எனக் கூறியுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











