TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
பிக் பாஸ் ஜனனியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?: தெரிந்தால் 'ஷாக்' ஆயிடுவீங்க

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஜனனியின் முதல் சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஜனனி மாடலாக இருந்து நடிகையானவர். விளம்பரப் படங்களில் நடித்த ஜனனியை பார்த்துவிட்டு கோலிவுட் இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு அளித்தனர்.
அவர் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போகிறது.
டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் கோல்கேட் புன்னகை டாஸ்கில் தங்களின் சிறந்த புன்னகை பற்றி போட்டியாளர்கள் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் ஜனனி தன்னால் மறக்க முடியாத சிறந்த புன்னகை எதுவென்று தெரிவித்தார். மேலும் தனது முதல் சம்பளம் எவ்வளவு என்றும் அப்பொழுது கூறினார். ஜனனி மாடலிங் செய்து வாங்கிய முதல் சம்பளத்தை கேட்டு நிச்சயம் ரசிகர்கள் வியந்திருப்பார்கள்.
சம்பளம்
ஜனனிக்கு மாடலிங் தொழில் மூலம் கிடைத்த முதல் சம்பளம் ரூ. 2, 500 ஆகும். அதையும் அவர் தனக்காக செலவு செய்யவில்லை. ஜனனியின் வீட்டில் வேலை பார்த்த ஒருவர் தனது மகனின் டியூஷன் ஃபீஸை கட்ட முடியாமல் இருந்தாராம். உடனே ஜனனி தனது முதல் சம்பளத்தை அந்த பையனுக்கு டியூஷன் ஃபீஸ் கட்டக் கொடுத்துள்ளார். தனது முதல் சம்பளத்தை நல்ல காரியத்திற்காக கொடுத்ததை நினைக்கும் போது எல்லாம் தன் முகத்தில் வரும் புன்னகையே சிறந்தது என்றார் ஜனனி.
கோலிவுட்
பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகு ஜனனிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. இனியாவது அவருக்கு அந்த அந்தஸ்து கிடைக்கட்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். பிக் பாஸுக்கு பிறகு ஜனனியின் சினிமா வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தாடி பாலாஜி
பிக் பாஸ் 2 வீட்டில் ஜனனியால் சண்டை சச்சரவு எதுவும் வந்தது இல்லை. மகத்துக்கு நல்ல தோழியாக இருந்து அறிவுரை வழங்கினார். ஆனால் மகத் ஜனனியை கண்டுகொள்ளவில்லை. தாடி பாலாஜி மீது பாசம் வைத்துள்ளார் ஜனனி. அவரை தனது மகள் போன்று பார்ப்பதாக கூறி வருகிறார் பாலாஜி. இந்நிலையில் ஜனனிக்காக அவர் மொட்டையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.