ஸ்ரீதேவி மகள்கள் இருவரும் எதற்காக சண்டை போடுவார்கள் தெரியுமா?

By Siva

Recommended Video

Actor Jhanvi Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்வின் பேச்சை மீறிய மகள்கள்- வீடியோ

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் எதற்காக சண்டை போடுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஸ்ரீதேவி தனது மகள்கள் தன்னை போன்று நடிகையாக விரும்பவில்லை. இருப்பினும் ஜான்வி நடிக்க ஆசைப்பட்டபோது அதற்கு அவர் தடை விதிக்கவில்லை.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூருக்கும் நடிகையாகும் ஆசை வந்துள்ளது.

குஷி

குஷி

மாடல் ஆகப் போகிறேன் என்று இத்தனை காலமாக கூறி வந்த குஷிக்கு அம்மா, அக்கா வழியில் நடிகையாகும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று முறைப்படி நடிப்பு பயிற்சி பெற விரும்புகிறார் என்று ஜான்வி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

குஷியும், அப்பா போனி கபூரும் ரொம்பவும் நெருக்கமாம். இந்நிலையில் குஷி அமெரிக்கா செல்ல விரும்புவதை நினைத்தாலே எனக்கு பயமாக உள்ளது. இது குறித்து நினைத்துப் பார்த்தால் கூட என் அப்பா அழுதுவிடுவார் என்கிறார் ஜான்வி.

சண்டை

சண்டை

நானும், குஷியும் நெருங்கிய தோழிகள். அவள் உடைகளை நான் அணிவேன். அதே போன்று என் உடைகளை அவள் அணிவாள். ஆனால் அவள் என் உடையை என் அனுமதி இல்லாமல் திருடி அணிந்தால் எனக்கு கோபம் வந்துவிடும். உடைக்காக தான் நாங்கள் சண்டை போடுவோம் என்று ஜான்வி கூறியுள்ளார்.

ஆடை

ஆடை

ஜான்வி கபூர் அணிந்த உடைகளை மீண்டும் மீண்டும் அணிவதற்காக அவரை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். இது குறித்து அவர் கூறியதாவது, தினமும் புதுப்புது உடை அணியும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X