சொல்றாங்க... விஜய்யுடன் நடிக்க ஜான்விக்கு இவ்வளவு சம்பளமா?

By

மும்பை: விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க, ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கான சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமான தெலுங்கு ஹீரோ, விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட 30 படங்களுக்கு மேல் இயக்கியவர்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

இந்தப் படத்தை, இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய படத்தில் அவர் அறிமுமாக உள்ளார்.

கரண் ஜோகர் சிபாரிசு

கரண் ஜோகர் சிபாரிசு

முதலில் ஆலியா பட், அனன்யா பாண்டே ஆகியோர் பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. பின்னர் கரண் ஜோகர், ஜான்வி கபூர் பெயரை, புரி ஜெகந்நாத்துக்கு சிபாரிசு செய்துள்ளார். இதையடுத்தே அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது.

தென்னிந்திய சினிமா

தென்னிந்திய சினிமா

விஜய் தேவரகொண்டா நடிப்பின் மீது மரியாதை இருக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த ஜான்வி, இப்போது அவருடன் நடிக்க உள்ளார். இந்தப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி.

தமிழில் தெலுங்கில்

தமிழில் தெலுங்கில்

இது தமிழில் தெலுங்கில் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச சம்பளம் இது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X