ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஸ்ரீதேவியின் மகள்: என்ன செய்தார் என்று பாருங்க
Recommended Video

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ
மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிவிட்டார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தாய் வழியில் நடிகையாகியுள்ளார். அவர் தடக் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்றார்.

உணவகத்தில் இருந்து வெளியே வந்த ஜான்வியை பார்த்த குட்டி ரசிகர்கள், ரசிகைகள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் குதித்தனர்.
மேலும் ஜான்வியின் கையை பிடித்தும், முதுகை தொட்டும் பார்த்தனர். அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்த ஜான்வியும் சிரித்துக் கொண்டே இருந்தார்.
அவரின் பாதுகாவலர்கள் வந்து அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











