அம்மா…. ஸ்ரீதேவியின் மகள்கள் பகிர்ந்த… உருக்கமான புகைப்படம் !
மும்பை : அன்னையர் தினத்தை முன்னிட்டு ஜான்வி கபூர் மற்றும் குஷிகபூர் ஆகியோர் தனது அம்மா ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில் இரண்டு சகோதரிகளும் வெளியிட்டுள்ள உள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மறக்கமுடியாது
சிலருடைய இழப்புக்களை , மரணங்களை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்னமும் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நம்மால்தான் அவர்களை பார்க்க முடியவில்லை என்று நினைத்து சமாதானமாக்கிக் கொள்வோம். யாரிடமாவது எதைப்பற்றியாவது பேசும் போது அவர்களின் நினைவுகளை சட்டென்று புகுத்தி கொண்டே இருப்போம். அந்தப் பட்டியலில் இருக்கும் முக்கியமானவர் ஸ்ரீதேவி.

திருமணம்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, ரஜினி,கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதிட்டு விட்டார். போனி கபூரை திருமணம் செய்து கொண்டு பாலிவுட் செட்டிலான ஸ்ரீதேவி 2018ம் ஆண்டு உயிரிழந்தனர். ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

பாவாடை சட்டையில்
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஜான்வி கபூர் மற்றும் குஷிகபூர் ஆகியோர் தனது அம்மா ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் இருக்க ஸ்ரீதேவியின் கையில் மொட்டை அடித்துக்கொண்டு பாவாடை சட்டையில் இருக்கிறார் ஜான்வி.

பிங்க நிற பிராக்
குஷி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஸ்ரீ தேவியின் மடியில் குஷி கபூர் பிங்க் நிறத்தில் ஒரு பிராக் போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தில் ஜான்வி கபூர் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு இருக்கிறார். அன்னையர் தினத்தில் இந்த சகோதரிகள் பகிர்ந்து கொண்ட புகைப்படம் பலரது லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











