Just In
- 20 min ago
'நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயம்' நடிகர் ராஜ்கிரண் பொங்கல் வாழ்த்து!
- 28 min ago
கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ!
- 1 hr ago
நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
மேக்கப் இல்லாமல் ரசிகர்களை மயக்கும் ஸ்ரீதிவ்யா.. உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்!
Don't Miss!
- News
வெறுப்பை வெல்லும் கோலம்.. பதவியேற்கும் விழாவில் பைடன், கமலா ஹாரிஸை கோலமிட்டு வரவேற்கும் இந்தியர்கள்!
- Lifestyle
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!
- Sports
2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்!
- Finance
லாபத்தில் 31% வளர்ச்சி அடைந்த 'ஹெச்சிஎல்' பங்குச்சந்தையில் 'சரிவு'..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் 2 படம்தானே நடிச்சிருக்காரு.. ரூ.39 கோடிக்கு வீடு வாங்கிய பிரபல நடிகை.. பரபரக்கும் தகவல்!
மும்பை: பிரபல நடிகை ஒருவர் ரூ.39 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
இந்தி தயாரிப்பாளர் போனி கபூர்- நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள்.
ஶ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மரணமடைந்தார்.

அங்ரேஸி மீடியம்
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து நெட்பிளிக்ஸுக்காக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். பின்னர் அங்ரேஸி மீடியம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

ரூஹி அஃப்ஸானா
அடுத்து குஞ்சன் சக்சேனா என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் முழுமையாக நடித்து வெளியான திரைப்படங்கள் இரண்டுதான். அடுத்து ரூஹி அஃப்ஸானா, தோஸ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ரூஹி அஃப்ஸானா படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

மூன்று தளங்கள்
இந்நிலையில், மும்பை ஜூஹு பகுதியில் வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார், ஜான்வி கபூர். அபார்ட்மென்ட் ஒன்றின் மூன்று தளங்களை வாங்கி இருக்கும் அவர், இதற்காக ரூ.39 கோடியை செலவழித்திருக்கிறார். டிசம்பர் மாதம் இதற்கான பத்திரப்பதிவு நடந்துள்ளதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

இத்தனை கோடி
பத்திரப்பதிவு தொகை மட்டும் ரூ.78 லட்சமாம். அதிக படங்களில் நடிக்காத ஜான்வி கபூர், இத்தனை கோடிக்கு வீடு வாங்கியிருப்பது பாலிவுட்டில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நடிகை ஆலியா பட், நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சமீபத்தில் மும்பையில் புதிய வீடுகளை வாங்கியிருந்தனர்.

ஊர்மிளா மடோன்கர்
ஆலியா பட், தனது காதலர் ரன்பீர் கபூர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்தார். நடிகை ஊர்மிளா மடோன்கர், சமீபத்தில் 3.75 கோடிக்கு மும்பையில் புதிய வீடு ஒன்றை அலுவலகத்துக்காக வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.