ஏம்மா, கேக் வெட்ட வாள் தான் கிடைச்சதா?: அதிர வைத்த ஸ்ரீதேவி மகள்
Recommended Video

வாரணாசி: ஜான்வி கபூர் தனது பிறந்தநாளை வாரணாசியில் கொண்டாடியுள்ளார்.
நான் இல்லாமல் இளைய மகள் குஷி கபூர் சமாளித்துவிடுவாள், ஆனால் மூத்த மகள் ஜான்விக்கு எல்லாவற்றுக்கும் நான் வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி.
அவர் இல்லாமல் ஜான்வி இன்று தனது 22வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அம்மா இல்லாமல் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி
ஜான்வி தனது பிறந்தநாளை வாரணாசியில் தந்தை போனி கபூர், தங்கை குஷியுடன் கொண்டாடினார். அவர் கேக்கை வாளால் வெட்டியுள்ளார். ஏம்மா அது கேக் வெட்டும் கருவியா?
சோனம் கபூர்
ஜான்வி கைக்குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அக்காவும், நடிகையுமான சோனம் கபூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாரா அலி கான்
பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது தோழி ஜான்விக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜான்விக்கு போட்டி நான் அல்ல என்று சாரா பல முறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி
அம்மா படங்களில் நடித்தபோது ஆண்டுதோறும் தனது பிறந்தநாள் அன்று திருப்பதி கோவிலுக்கு செல்வார். நானும் அவரை போன்றே திருப்பதி கோவிலுக்கு செல்ல நினைத்தேன், முடியவில்லை என்று ஜான்வி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











