அடுத்தடுத்த தென்னிந்திய ரீமேக்குகளில் ஜான்வி கபூர்... கைக்கொடுக்குமா கோலமாவு கோகிலா
மும்பை : பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக மலையாள ரீமேக்கான ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதன் சூட்டிங் ஆகஸ்ட்டில் துவங்கவுள்ளது.

சிறப்பான படங்கள்
தடாக் படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர், தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமுக வலைதளங்களிலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே காணப்படுகிறது.

நயன்தாரா ரோலில் ஜான்வி
இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். குட்லக் ஜெர்ரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா ரோலில் இவர் நடித்துள்ளார். தமிழில் நெல்சன் திலீப்குமார் கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்து இந்த படம் சிறப்பான வெற்றி பெற்றது.

ஹெலன் ரீமேக்கில் ஜான்வி
இந்தியில் சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங்கை தற்போது ஜான்வி கபூர் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மலையாள படமான ஹெலனின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடிக்கவுள்ளார். இதன் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளது.

ரீமேக்கில் ஜான்வி கவனம்
இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் தற்காலிகமாக மில்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களின் ரீமேக்கில் ஜான்வி கபூர் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக உள்ள நிலையில் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











