மணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர் .. அட்டகாசமான புகைப்படம் உள்ளே.. வலிமை அப்டேட்டை கேட்ட ரசிகர்!
மும்பை : பிரபல மூத்த நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்பொழுது பாலிவுட் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகையாக வளர்ந்து வருகிறார்.
பிரபலமான திரை குடும்பத்திலிருந்து வந்த இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து "தோஸ்தானா 2" திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்களை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் இவரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.

சவாலான கதாபாத்திரங்களை
பாலிவுட் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகப் பிரகாசமாக வளர்ந்து வரும் ஜான்வி கபூர் நடித்த ஒரு சில திரைப்படங்களிலேயே சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

கார்த்திக் ஆர்யானுடன்
சமீபத்தில் கார்கில் போரை மையமாகக் கொண்டு உருவான "குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்" பயோபிக் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஜான்விக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில் இப்பொழுது நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து "தோஸ்தானா 2"ல் நடித்து வருகிறார்.

அரசல்புரசலாக
கார்த்திக் ஆர்யான், ஜான்வி கபூர் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் அதே சமயம் இருவரும் உண்மையிலேயே காதலித்து வருகின்றனர் என்ற செய்தியும் அரசல்புரசலாக அவ்வப்போது பாலிவுட்டில் உலாவருகிறது.

வலிமை அப்டேட் வாங்கி குடுங்க
இந்நிலையில் ஜான்வி கபூர் அட்டகாசமான லுக்கில் மணப்பெண் போல இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இவரின் அழகை வர்ணித்து பலரும் பாராட்டி வரும் நிலையில், தீவிர அஜித் ரசிகர் ஒருவர் " உங்க அப்பாகிட்ட சொல்லி வலிமை அப்டேட் வாங்கி குடுங்க தோழி" எனக் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications