இதுக்கு ஷார்ட்ஸ் போடாமலேயே இருக்கலாமே: ஸ்ரீதேவி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

Actress Jhanvi Kapoor: ஜான்வி கபூர் இஷான் கட்டர் மீதுள்ள நட்பு- வீடியோ

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரின் ஜிம் உடையை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மீண்டு கலாய்க்கிறார்கள்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அவர் தினமும் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்கிறார். சொல்லப் போனால் அவர் நடிக்க வருவதற்கு முன்பே ஜிம் செல்லும் பழக்கம் உடையவர்.

ஜிம்முக்கு செல்லும்போது குட்டியான ஷார்ட்ஸ் அணிவது ஜான்வியின் வழக்கம். இந்நிலையில் அந்த ஷார்ட்ஸுக்காக நெட்டிசன்கள் அவரை அடிக்கடி கிண்டல் செய்கிறார்கள்.

ஷார்ட்ஸ்

ஜான்வி அவரின் ஷார்ட்ஸுக்காக தற்போது மீண்டும் கலாய்க்கப்பட்டுள்ளார். ஜான்வி குட்டி ஷார்ட்ஸ் அணிந்து, மெல்லிசான சட்டையுடன் ஜிம்முக்கு சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன பேருக்காக தான் ஷார்ட்ஸ் போடுகிறீர்களா?

உடை

உடை

திறமையை ஆடை குறைப்பில் காட்டாமல் நடிப்பில் காட்டுங்கள். நடிப்புத் திறமையில் நம்பிக்கை வைக்கும் யாரும் இப்படி குட்டியாக உடை அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்ய மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் ஜான்வியை வறுத்தெடுத்துள்ளனர். என் உடை பற்றி யார் குறை கூறினாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்கிறார் ஜான்வி.

நடிப்பு

நடிப்பு

அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. என் நடிப்பு பற்றி ஏதாவது குறை சொன்னால் அதை நான் கேட்டுக் கொண்டு திருத்திக் கொள்வேன். ஜிம்முக்கு வெளியே நான் எப்படி இருக்கிறேன் என்பதற்கு எல்லாம் கவலைப்பட முடியாது. என்னை யாராவது சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தால் முன்பெல்லாம் கவலையாக இருக்கும். தற்போது அதை நான் கண்டுகொள்வதே இல்லை. முகம் தெரியாத நபர்களின் கிண்டலுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இது என்ன இந்த ஜான்வி இப்படி குட்டி, குட்டியாக உடை அணிந்து ஜிம்முக்கு வருகிறார். அவரின் உடையை பார்த்து கவலையாக உள்ளது என்றார். அவரின் பேட்டியை பார்த்த நடிகை சோனம் கபூர் கத்ரீனாவுக்கு தக்க பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X