அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் மாஸான அப்டேட்... நடிகையை ஓகே செய்த அட்லீ!

சென்னை: ராஜா ராணி படத்தின் முலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக விஜயை வைத்து இயக்கியிருந்தார். இவர் இயக்கிய 4 படங்களும் மெகா ஹிட் அடைந்தன. இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக சினிமா கரியரை தொடங்கி இன்று இந்திய அளவில் தோல்வியை சந்திக்காத இயக்குநர் என்ற பெயரை எடுத்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

படங்களும் சர்ச்சைகளும்: இயக்குநர் அட்லீ இயக்கும் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. இருப்பினும், பழைய படங்களை காப்பி அடித்து படங்களை இயக்குவதாக அட்லீ மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவரது முதல் படமான ராஜா ராணி படமும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மெளனராகம் படத்தின் கதைதான் என்ற விமர்சனமும் எழுந்தது. தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பற்றி அலட்டி கொள்ளாமல் தனது பணியை அட்லீ சிறப்பாக செய்து வருகிறார்.

Atlee Allu Arjun Janhvi Kapoor

இந்தியில் ரூ.1000 கோடி வசூல்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக தடம் பதித்த அட்லீ இந்தியில் முதல் முறையாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2023ஆம் ஆணடில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 1,000 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. அட்லீயின் குருவான ஷங்கர் செய்யாத சாதனையை அட்லீ செய்து காண்பித்தார். ஒரு தமிழ் இயக்குநர் இந்தியில் இயக்கிய முதல் படமே வசூலை குவித்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

மொக்கை வாங்கிய பேபி ஜான்: கடந்த 2016ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வசூலிலும் ரூ.100 கோடியை எட்டியதாகக் கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் அமைந்தது. இப்படத்தினை இயக்குநர் அட்லீ இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். இப்படத்தினை அட்லீ தயாரிக்க, அவரது உதவி இயக்குநர் காலீஸ் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ், வருன் தவான் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மொக்கை வாங்கியது. வசூல் ரீதியாகவும் பேபி ஜான் சுமாரான நம்பர்களை பெற்றன. இப்படத்தின் மூலம் அட்லீ பெரும் நஷ்டமடைந்தார். முதல் முறையாக தோல்வி என விமர்சனங்கள் எழுந்தன.

அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணி: ஜவான் படத்திற்கு பிறகு இந்தியில் சல்மான்கானை வைத்து பிரம்மாண்ட படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,தெலுங்கு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், உறுதி செய்யப்பட்ட தகவல் தான் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அல்லு அர்ஜுனுக்காக ஒரு பிரம்மாண்ட கதையை தனது ஸ்டைலில் சொல்ல தயார் செய்து வருகிறாராம். இந்நிலையில், இப்படத்தில் நடிகை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Atlee Allu Arjun Janhvi Kapoor

அல்லு அர்ஜுன் படத்தில் ஜான்வி கபூர்: நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு நல்ல பிரபலமான நடிகை தேவை என தயாரிப்பு நிறுவனம் இயக்குநரிடம் தெரிவித்துள்ளது. இதனை புரிந்துகொண்ட இயக்குநர் அட்லீ ஜான்வி கபூரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தெலுங்கில் என்டிஆருடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X