ஜூனியர் என்டிஆருடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்... சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
மும்பை: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி, ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஜூனியர் என்டிஆர் உடன் ஜோடியாக நடிக்க ஜான்வி கபூருக்கு கொடுக்கப்படும் சம்பளம் தெலுங்குத் திரையுலகையே அதிரச் செய்துள்ளது.

நட்சத்திரங்களின் வாரிசு
1980களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கோலிவுட்டில் ரஜினி, கமல் உட்பட தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். ஸ்ரீதேவி - போனி கபூரின் வாரிசான ஜான்வி கபூரும் தனது அம்மா வழியில் பாலிவுட்டில் நடிகையாக கலக்கி வருகிறார்.

டோலிவுட்டில் அறிமுகம்
இந்தியில் 2018ம் ஆண்டு ரிலீஸான தடாக் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜான்வி, அடுத்தடுத்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜான்வி நடிப்பில் மொத்தமே இதுவரை 6 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஜான்வி.

அசத்தல் போஸ்டர்
கொரட்டலா சிவா இயக்கும் NTR 30 படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தான் ஜான்வி கபூரின் 26வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டரில் ஆஃப் சாரியில் மிக வசீகரமாக அமர்ந்துள்ளார் ஜான்வி கபூர். இறுதியாக NTR 30ல் இணைந்தேன். ஜூனியர் NTR நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாவில் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளார். அதன் கீழே ஜூனியர் NTR-ம் ஜான்வி கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
அடிக்கடி இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் தனது கிளாமர் படங்களை ஷேர் செய்து வருகிறார் ஜான்வி கபூர். இதனால், அவருக்கு பல மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 6 படங்களில் நடித்திருந்தாலும், அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜான்வி. அதனால், NTR 30 படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் டோலிவுட் நடிகைகளுக்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளதாம்.

கோலிவுட்டுக்கு முன்னர் டோலிவுட்
ஜான்வி கபூர் நடிப்பில் பவால், மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. முன்னதாக லிங்குசாமி இயக்கவிருக்கும் பையா 2 படத்தில் கார்த்தியின் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், அவரது தந்தை போனி கபூர், ஜான்வி இப்போதைக்கு எந்த தமிழ்ப் படங்களிலும் நடிக்கவில்லை, தயவுசெய்து வதந்தியை பரப்ப வேண்டாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது தெலுங்கில் ஜூனியர் NTR உடன் ஜோடி சேர்கிறார் ஜான்வி கபூர்.


Click it and Unblock the Notifications











