Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
“கோஸ்ட் ஸ்டோரிஸ்”.. வாழ்த்து மழையில் நனையும் ஸ்ரீதேவி மகள்
சென்னை: முதல் படத்திலேயே நல்ல பெயர் எடுத்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அடு்த்ததாக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற திகில் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு என்பது மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அதே நேரம் விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது இருக்கும். இது போனிகபூர், ஶ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பொருந்தும். தான் தாயை போல சினிமாவில் மின்னும் கனவோடு சினிமாவில் நுழைந்து உள்ளார்.
அவரின் முதல் படமான தாதக் படத்தில் அவரின் நடிப்பு குறி்த்து ரசிகர்கள், விமர்சகர்கள் என, அனைவரும் பாராட்டும் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் கதாப்பாத்திரங்களில் அதீத கவனம் கொண்டிருக்கிறார். தனது கதாப்பாத்திரங்களுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து திரையில் உயிர் தருவதில் வல்லவராக இருக்கிறார். தனது சிறப்பான நடிப்பை அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து தந்து வருகிறார்.
இந்த 2020 புதிய வருட தொடக்கத்தின் ஆரம்பத்திலேயே, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் தயாரிப்பான ஆந்தாலஜி படம் "கோஸ்ட் ஸ்டோரிஸ்" படத்தில் ஒரு பகுதியில் நடித்துள்ளார். அவரது பிரமிப்பு தரும் நடிப்பு ரசிகர்கள் விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கும் அதே நேரம் மற்ற நடிகர்களிடமும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கியுள்ள பகுதியில் இளம் செவிலியராக நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். தனது காதலன் மீது அதிக அன்பு கொண்டவராகவும் ஒரு அபார்ட்மெண்டில் மாட்டிக்கொண்ட பெண்ணின் தவிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹாரர் படத்தின் மையமே பயமும் திகிலும் தான். ஜான்வி கபூர் அந்த கதாப்பாத்திரத்தில் ஒன்றி பயத்தையும், திரில் உணர்வையும் நமக்குள் அட்டகாசமாக கடத்தியிருக்கிறார். நடிக்க ஆரம்பித்திருக்கும் இந்த இளம் வயதில், வெகு சில படத்திலேயே ஒரு நல்ல நடிகை எனும் பெயரை பெற்றிருக்கிறார் ஜான்வி கபூர்.
இதுதான் ட்ரிப்பா.. சுனைனாவா கட்டிப் போட்டு.. யோகி பாபுவும், கருணாகரனும் என்ன பண்றாங்க பாருங்க!
இணையவாசிகள் தொடங்கி டிவிட்டர் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் இருந்து ஜான்வி கபூருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த வருடத்தின் ஆரம்பமே அவருக்கு அருமையான ஒன்றாக அமைந்திருக்கிறது.