இயக்குநரின் லட்சணம் தெரிந்து விஜய்யுடன் ஜோடி சேர மறுக்கும் ஜான்வி
மும்பை: இயக்குநரின் குணம் தெரிந்ததால் ஜான்வி விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க மறுக்கிறாராம்.
டியர் காம்ரேட் படத்தை விஜய் தேவரகொண்டா பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதையடுத்து அவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஃபைட்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.

ஜான்வி கபூர்
ஃபைட்டரில் நடிக்குமாறு ஜான்வி கபூரை அணுகியுள்ளனர். ஆனால் அவர் பக்கத்தில் இருந்து பதிலே இல்லையாம். ஜான்வி முன்னதாக மகேஷ் பாபு, ராம் சரண் தேஜா ஆகியோரின் படங்களிலேயே நடிக்க மறுத்தார். தான் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் படத்தில் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம் ஜான்வி.

ஹீரோயின்
ஃபைட்டர் படத்தில் ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம். ஹீரோயினுக்கு விஜய்யை காதலித்து டூயட் பாடுவதுடன் வேலை முடிந்துவிடுமாம். மேலும் பூரி கெஜன்நாத் படங்களில் ஹீரோயின்களை காட்டும் விதம் ஜான்விக்கும், அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூருக்கும் பிடிக்கவில்லையாம்.

இயக்குநர்
முதன்முதலாக தெலுங்கில் நடிக்கும் படம் பூரி ஜெகன்நாத் படமாக இருப்பதை ஜான்வியும், போனி கபூரும் விரும்பவில்லையாம். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஐஸ்மார்ட் ஷங்கர் படம் வெற்றி பெற்றாலும் அதை விமர்சகர்கள் கேவலமாக கழுவிக் கழுவி ஊத்தினார்கள். இந்த இயக்குநர் மூளையை கழற்றிவைத்துவிட்டாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

விஜய் தேவரகொண்டா
ஜான்வி தற்போது தான் பாலிவுட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறார். இந்நேரத்தில் அவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லையாம். பூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார் என்ற செய்தியை பார்த்து அவரின் ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. விஜய் அண்ணா பூரி படம் வேண்டாம், அவர் ஸ்டைல் உங்களுக்கு ஒத்தே வராது, பெயரை கெடுத்து உங்களை காமெடி பீஸாக்கிவிடுவார் என்று ரசிகர்கள் எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











