இந்தியில் ரீமேக் ஆகும் கோலமாவு கோகிலா.. நயன்தாரா ரோலில் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படத்தை, இந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளனர்.

போதைப் பொருள்

போதைப் பொருள்

நாடு முழுவதும் போதைப் பொருள் விவகாரம் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. அதிலும், கர்நாடகா மற்றும் மும்பையில் தான் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிலையில் போதைப் பொருளை சாமானிய பெண் ஒருவர் குடும்ப சூழலுக்காக கடத்தும் கதையான கோலமாவு கோகிலா படத்தை தயாரிக்க எக்கச்சக்க போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

வேற லெவல் நடிப்பு

வேற லெவல் நடிப்பு

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் ஒரு பிளாக் காமெடி திரைப்படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்பாவி பெண்ணாக வெறும் பாவாடை சட்டை அணிந்து கொண்டு லேடி சூப்பஸ்டார் நயன்தாரா வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கன்னட ரீமேக்

கன்னட ரீமேக்

கன்னட மொழியில் கோலமாவு கோகிலா படத்தை ரீமேக் செய்யும் உரிமை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. கன்னட நடிகையான ரட்சிதா ராம் தான் நயன்தாரா நடித்திருந்த கோகிலா ரோலில் நடிக்கிறார். இந்நிலையில், பாலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் ஆவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாலிவுட்டில்

பாலிவுட்டில்

நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், ஜேக்குலின், யோகி பாபு, சரவணன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடிப்பில் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவான கோலமாவு கோகிலா படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முன் வந்துள்ளனர். இயக்குநர் ஆனந்த் எல் ராய் தயாரிப்பில் பாலிவுட்டில் அந்த படம் வெகு விரைவாக ரீமேக் ஆக உள்ளது.

யார் ஹீரோயின்

யார் ஹீரோயின்

கன்னடத்தில் ரட்சிதா ராம் நயன்தாரா ரோலில் நடிக்க உள்ள நிலையில், பாலிவுட்டில் கோகிலா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் நடிக்கப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட் தற்போது கசிந்துள்ளது. பாவமான அந்த முக பாவணை இயல்பாகவே ஜான்வி கபூருக்கு இருப்பதால், கோகிலா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவார் ஜான்வி கபூர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிசி ஹீரோயின்

பிசி ஹீரோயின்

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஒடிடி தளத்தில் அவர் நடித்த கஞ்சன் சக்ஸேனா படம் வெளியானது. மேலும், கைவசம் ரூஹி அஃப்சானா மற்றும் தோஸ்தானா 2 படங்களும் உள்ளன.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

தமிழில் கோலமாவு கோகிலா என டைட்டிலேயே வித்தியாசமாக வைத்து மிரட்டி இருந்தார் இயக்குநர் நெல்சன். பாலிவுட்டில் தற்போது போதைப் பொருள் விவகாரத்தில் ‘மால்' என்கிற வார்த்தை பிரபலமாகி வருவதால், அதை மையமாக வைத்து டைட்டில் வைப்பார்களா? இல்லை எப்படி வைக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X