திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
மும்பை: விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டதை அடுத்து, கோலமாவு கோகிலா படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இப்போது நடிக்கும் படம், குட் லக் ஜெர்ரி. அவர் தற்போது, குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது தமிழில் நயன்தாரா நடித்து வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்.

சித்தார்த் சென்குப்தா
இதை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார். இதில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்க, பஞ்சாப்பில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. பாஸி பதானா நகரில் ஷூட்டிங் நடந்த போது, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்த விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தி திரையுலகம்
அதிகமான விவசாயிகள் திடீரென அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை இந்தி திரையுலகினர் கண்டுகொள்ளவில்லை.

ஜான்வி கபூர்
விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் பேசிய இயக்குனர் சென்குப்தா, விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை ஜான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார் என்று கூறி சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நாட்டின் இதயம்
இதையடுத்து நடிகை ஜான்வி கபூர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில், விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து ஒன்றைப் பதிவிட்டார். அதில், விவசாயம் தான் நம் நாட்டின் இதயம். நமது தேசத்துக்கு உணவளிக்கும் அவர்கள் பங்கை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் ஆதாயமடையும் வகையிலான தீர்மானம் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார் ஜான்வி.

திரும்பிச் செல்
இந்நிலையில் இந்த படக்குழுவினர் பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா சாலையில் படப்பிடிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று கூடிய விவசாயிகள் படக்குழுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜான்வி கபூரே திரும்பிச் செல் என்று கோஷமிட்டனர்.

படப்பிடிப்பு நிறுத்தம்
கூட்டம் அதிகமானதால், படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு ஜான்வி கபூர் உட்பட படக்குழுவினர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அனுப்பப்பட்டனர். அந்த ஓட்டல் முன்பு விவசாயிகள் தர்ணாவில் நடத்தினர். பின்னர் போலீசார் அங்கு வந்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Click it and Unblock the Notifications











