கவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்

Recommended Video

Actress Jhanvi Kapoor: ஜான்வி கபூர் இஷான் கட்டர் மீதுள்ள நட்பு- வீடியோ

மும்பை: ஜான்வி கபூர் ஷார்ட் உடை அணிந்து ஜிம்மில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. இதைப்பார்த்த பாலிவுட் திரையுலகின் முக்கிய நபர்கள் ஜான்வி கபூர் உடையைக் குறைத்துக்கொண்டு திறமை காட்டாமல் ஸ்ரீதேவியைப் போல் நடிப்புத் திறமையோடு நளினத்தையும் கற்றுக்கொண்டால் மட்டுமே இந்தியத் திரையுலகில் சிறப்பாக வலம் வரலாம் என்று ஆதங்கப்படுகின்றனர்.

மறைந்த கனவுக் கன்னி நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் திரையுலகில் பிஸியான நடிகையாகிவிட்டார். மராத்தியில் தேசிய விருது பெற்ற சாய்ராட் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படம் தடக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

Janhvi Kapoor should learn talent and politeness like Sridevi

தற்போது கஞ்சன் சக்ஸேனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது முழு கவனத்தையும் நடிப்பின் மீது கொண்டுள்ளதால் அதற்கு தேவையான திறமைகளை மேம்படுத்தி கொண்டுவருகிறார். இதற்காக டான்ஸ் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

தன்னுடைய உடம்பை வருத்திக்கொண்டு, அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பு, ஜிம்முக்கு போகும் போது குட்டையான ஷார்ட்ஸ் அல்லது குட்டையான உடைகள் அணிந்து வலம் வந்த போதே பல முறை விமர்சனங்களுக்கு ஆளானவர்.

ஜான்வி கபூர் உடையை குறைத்து கொண்டு உடம்பை காட்டாமல் நடிப்பில் திறமையை கட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்தனர். நெட்டிசன்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவந்தன. இதற்கு பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். ஆனால், அதற்கெல்லாம் கொஞ்சமும் வருத்தப்படாமல் அதிரடியாக பதிலடி கொடுத்து வந்தார் ஜான்வி கபூர்.

எனது உடையை பற்றி முகம் தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்வதைப் பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்க போவதும் இல்லை என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போதும் அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்து விட்டு ஷார்ட் உடை அணிந்து ஜிம்மில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.

இதில் இருந்த அவர் எந்த ஒரு விமர்சனத்திற்கும் அஞ்சவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. உடை அணிவது அவரவர் சுதந்திரம், அதில் யாரும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் அது மற்றவர்கள் மதிக்கத்தக்க உடையாக இருந்தால் நல்லது. தாயின் நடிப்பு திறமையோடு நளினத்தையும் கற்றுக்கொண்டால் திரையுலகில் சிறப்பாக வரலாம், வளரலாம் என்பது ஸ்ரீதேவி குடும்பத்தின் நலன் விரும்பிகளின் வேண்டுகோளாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X