அடுத்த வருடம் ஷூட்டிங்.. அந்த சூப்பர் ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஜான்வி கபூர்!
சென்னை: அந்த தென்னிந்திய சூப்பர் ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
Recommended Video
வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில், மதுக்குட்டி சேவியர் இயக்கி மலையாளத்தில் வெளியான படம் 'ஹெலன்'.
அன்னா பென், லால், அஜு வர்கீஸ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம், கேரளாவில் வரவேற்பை பெற்றது.

கீர்த்தி பாண்டியன்
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் அருண் பாண்டியன், அவர் மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் நடிப்புக்குத் திரும்புகிறார், அருண் பாண்டியன். தனது ஏ.பி நிறுவனத்தின் மூலம் இந்த ரீமேக்கை அவரே தயாரிக்கிறார். படத்தை கோகுல் இயக்குகிறார்.

கனடா கனவு
இவர், ஜீவா நடித்த ரவுத்திரம், விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', கார்த்தி நடித்த காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா உட்பட சில படங்களை இயக்கியவர். நர்ஸிங் மாணவியான ஹெலனுக்கு கனடாவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவு. தினமும் அந்தக் கனவிலேயே இருக்கிறார். அதற்காக தன்னை தயார் செய்து வருகிறார். ஹெலனின் அப்பா, லாலுக்கு அது பிடிக்கவில்லை.

காணாமல் போகிறார்
இதற்கிடையே ஹெலன் தன் காதலனுடன் ஒருநாள் பைக்கில் சென்று திரும்பும்போது போலீசில் மாட்ட, லால் தனது மகளிடம் பேச மறுக்கிறார். பிறகு ஒரு நாள் ஹெலன் காணாமல் போகிறார். தேடு தேடு என்று தேடுகிறார்கள். காதலன் மீதும் சந்தேகம். அவர் என்ன ஆனார், எங்கே சிக்கிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்டார் என்பதுதான் கதை. சின்ன லைன்தான். அதை சொன்ன விதத்தில் இந்தப் படம் வெற்றி பெற்றது.

ஜான்வி கபூர்
இந்தப் படம் தமிழை அடுத்து, இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. இந்தி ரீமேக்கில் ஹெலனாக நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார். இதன் ரீமேக் உரிமையை பெற்றுள்ள அவர் தந்தை போனிகபூர் படத்தை தயாரிக்க இருக்கிறார். அடுத்த வருடம் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய தகவல் பின்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











