சூப்பர் ஹிட் மூவி ‘அலா வைகுண்டபுரம்லோ‘..இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கிறார் !

மும்பை : அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டான 'அலா வைகுண்டபுரம்லோ' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

Tabu seems electric with 24 Years Ishaan Khatter

இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெளியாகி பல வசூல் சாதனைகளை செய்து இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் வசூல் ராஜ்ஜியம் செய்தது. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள், காதுகளுக்கு இனிமையான பாடல்கள், தெலுங்குப் படங்களுக்கே உரித்தான மசாலா காட்சிகள் என ஃபுல் மீல்ஸ் கமர்ஷியல் திரைப்படமாக வெளியான அலா வைகுண்டபுரம்லோ தற்போது இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது.

இயக்குனர் திரிவிக்ரம்

இயக்குனர் திரிவிக்ரம்

அதிரடி ஆக்சன் மற்றும் கமர்சியல் திரைப்படங்களை இயக்குவதில் இந்திய அளவில் சிறந்த இயக்குனராக பார்க்கப்பட்டு வரும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள பவன் கல்யாண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர்களுடன் தொடர்ந்து பணியாற்றி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தெலுங்கு திரைத்துறையை தொடர்ந்து வசூல் மழையில் நனைய வைத்து வருகிறார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு

நீண்ட வருடங்களுக்குப் பிறகு

அவ்வாறு இவர் இயக்கிய பல திரைப்படங்கள் அபார வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படம் வெளியான அனைத்து சென்டர்களிலும் மாஸ் காட்டி வசூலை வாரி குவித்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அல்லு அர்ஜுனுக்கு இந்த திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது.

சிறந்த திரைக்கதை

சிறந்த திரைக்கதை

ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள், அல்லு அர்ஜுனின் அசால்ட்டான நடிப்பு, காதுகளுக்கு இனிமையான பாடல்கள், சிறந்த திரைக்கதை என அனைத்து வகையிலும் சிறப்பம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசைத்த பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய பலமாக அமைந்தது.

வசீகரிக்கும் நடனம்

வசீகரிக்கும் நடனம்

இந்த படத்தில் வரும் புட்ட பொம்மா பாடலும் அல்லு அர்ஜுன்,பூஜா ஹெக்டே அதற்கு ஆடிய வசீகரிக்கும் நடனமும் பலரையும் கவர்ந்து இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பல நாடுகளை கடந்து மொழி தெரியா ரசிகர்களைக் கூட இப்பாடல் ரசிக்க வைத்து குத்தாட்டம் போட வைத்தது.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படமான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தை, தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இப்படத்தில் மூத்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

ஜான்வி தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப் படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் தற்பொழுது "குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்" மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் அலா வைகுண்டபுரம்லோ படத்தை பார்த்த ஜான்விக்கு அந்த படம் மிகவும் பிடித்து போனதாகவும், இதில் நடிப்பதற்கான உச்சகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்க இருக்க கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹசின் கிரியேஷன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட தகவல்களை விரைவில் இந்த படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X